12-13 நிமிடங்கள் மீதமிருந்தும் போட்டி முன்கூட்டியே முடிவடைய இதுவே காரணாம் – பறிபோன இந்திய வெற்றி

Light
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் இரண்டு அணிகளுமே கடுமையான போராட்டத்தை அளித்ததன் காரணமாக கடைசி நாளில் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இருப்பினும் இந்திய அணியானது கிட்டத்தட்ட வெற்றியின் அருகில் வந்தது போட்டியை கோட்டை விட்டது என்றே கூறலாம்.

ind

- Advertisement -

ஏனெனில் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நியூசிலாந்து அணிக்கு நிர்ணயித்த இந்திய அணியானது நியூசிலாந்து அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது. கடைசி விக்கெட்டை 52 பந்துகளாக போராடி அந்த விக்கெட்டை வீழ்த்த முடியாமல் போனது.

ஆனால் இப்போட்டி முடிவடைய 12 முதல் 13 நிமிடங்கள் இருந்த வேளையில் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் இந்திய ரசிகர்கள் அதிர்ப்தி அடைந்தனர். ஆனால் அதற்கான சரியான காரணத்தை அம்பயர்கள் விளக்கி கூற இந்திய கேப்டனும் ரஹானேவும் ஒப்புக்கொண்டார். அதன்படி ஐந்தாவது நாளில் ஏற்கனவே 90 ஓவர்களை இந்திய அணி வீசியது மட்டுமின்றி மீதம் இருக்கும் நேரத்தில் பந்துவீச தயாராக இருந்தது.

ind 1

ஆனால் மைதானத்தில் உள்ள வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதாக அம்பயர்கள் அறிவித்தார்கள். அதுமட்டுமின்றி ஒளியின் அளவை துல்லியமாக கணிக்கும் கருவியின் மூலம் ஆட்டம் விளையாடும் அளவிற்கு போதுமான வெளிச்சம் இல்லை என்பதை அம்பயர்கள் சுட்டிக்காட்டினர். அதனை இந்திய அணியின் கேப்டன் ரஹானேவும் ஏற்றுக்கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : தனது சாதனையை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த அஷ்வினுக்கு – ஹர்பஜன் கூறிய வாழ்த்து

அதன் காரணமாகவே போட்டி 12 முதல் 13 நிமிடங்களுக்கு முன்னதாக நிறுத்தப்பட்டது. வெற்றியின் அருகில் இருந்த இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்திருந்தாலும் இரு அணி வீரர்களும் இறுதியில் மகிழ்ச்சியுடனேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement