தனது சாதனையை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த அஷ்வினுக்கு – ஹர்பஜன் கூறிய வாழ்த்து

Harbhajan
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச்சை மட்டுமில்லாமல், பேட்டிங்கிலும் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு முதல் இன்னிங்சில் 3 விக்கெட் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் என அசத்திய அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ashwin 2

அதன்படி 35 வயதான தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் தற்போது ஹர்பஜன் சிங்கை கடந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் டாம் லேதமை ஆட்டமிழக்கச் செய்த அவர் இந்த சாதனையை செய்துள்ளார். 417 விக்கெட்டுகள் எடுத்திருந்த ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி தற்போது 418 விக்கெட்டுகளுடன் அஷ்வின் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

அஷ்வினுக்கு மேல் இரண்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். முதலாவது இடத்தில் அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதில் வெகுவிரைவிலேயே கபில்தேவ் சாதனையை அஷ்வின் முறியடிப்பது உறுதி. அதோடு இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் அஷ்வின் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடும் பட்சத்தில் கும்ப்ளேவின் சாதனையையும் முறியடிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் தற்போது தனது சாதனையை முறியடித்த அஷ்வினுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “வாழ்த்துக்கள் அஷ்வின், விஷ் யூ மெனி மோர் பிரதர்” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இவர்தான் உண்மையான “டீம் மேன்” 37 வயது சீனியர் வீரரை பாராட்டிய – பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்

ஏற்கனவே அஷ்வின் அவரது சாதனையை தாண்டுவதற்கு முன்னர் பேட்டியளித்திருந்த ஹர்பஜன் நிச்சயம் அஷ்வின் இந்த சாதனைக்கு தகுதியுடையவர் தான் என்றும், நான் விளையாடிய காலத்தில் என்னால் முடிந்த வரை இந்திய அணிக்கு எனது பங்களிப்பினை வழங்கினேன். அதற்கு பின்னர் தற்போது அஷ்வின் தன்னுடைய பெஸ்ட்டை இந்திய அணிக்கு கொடுத்து வருகிறார். எனவே அவர் எனது சாதனையை தாராளமாக முறியடிக்கலாம் என்று மனதார கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement