சி.எஸ்.கே அணி வீரர்களுக்கு கொரோனா பரவ காரணம் இதுதானாம் – வெளியான அதிர்ச்சி தகவல்

csk
- Advertisement -

ஐபிஎல் தொடர் எப்போது நடைபெற்றாலும் அதில் முதல் அணியாக சிஎஸ்கே அணி அனைத்தையும் துவங்குவது வழக்கம். மேலும் சிஎஸ்கே அணிக்கான எதிர்பார்ப்பு இந்தியா முழுவதிலும் உள்ளது. அந்த அளவிற்கு சிஎஸ்கே அணி ஐ.பி.எல்-இல் ஒரு அங்கமாகி உள்ளது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் இந்த சீசனுக்கும் சி.எஸ்.கே அணி முதலாக பயிற்சியை மேற்கொண்டது. நடப்பு சீசனுக்காக அனைத்து அணிகளும் பயிற்சி செய்ய தயங்கியபோது சேப்பாக்கத்தில் 5 நாள் பயிற்சியை சென்னை சிஎஸ்கே வீரர்கள் மேற்கொண்டனர்.

பயிற்சியை முடித்துக்கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்தது. அதற்கு அடுத்து தற்போது சி.எஸ்.கே அணிக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மற்ற அணிகள் எல்லாம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேராக பயணிக்க சென்னை அணியோ 5 நாட்கள் சேப்பாக்கத்தில் பயிற்சியை முடித்துக்கொண்டு பறந்தது,.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இரண்டு வீரர்கள் உட்பட பதிமூன்று பேருக்கு ஒரு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சிஎஸ்கே வீரர்கள் மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை சிஎஸ்கே அணி வீரர்களால் பயிற்சியை மேற்கொள்ள முடியாது என்று தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது சிஎஸ்கே அணி வீரர்களுக்கு கொரோனா வந்ததன் காரணம் ஏன் என்று கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அதன்படி துபாய் புறப்படும் முன்பு கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த சென்னையில் சிஎஸ்கே அணி வீரர்கள் பயிற்சி செய்ததே காரணம் என்று ஒரு செய்தியும் வந்துகொண்டிருக்கிறது. சென்னையில் இருந்த சில நாட்களில் பயிற்சி செய்தாலே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்றும் மேலும் இங்கு ஒன்றுகூடி பயிற்சியை மேற்கொண்ட வீரர்கள் தொற்று ஏற்பட்டு இருக்கலாமோ ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

csk 1

ஏனெனில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற வீரர்கள் பயிற்சியை தொடங்கும் முன்னரே ஒரு சில நாட்களிலேயே இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி தற்போது இந்த தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி விளையாட வாய்ப்பு இல்லை என்றும் அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பெங்களூரு அணி மோதும் கூறப்படுகிறது.

Advertisement