மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர், டி20 போட்டிகளில் ஜாம்பவானாக கருதப்படும் பிராவோ விளையாடாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியை எழுப்பியது. ஏனெனில் சமீபத்தில்தான் பிராவோ டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் அவர் நேற்றைய போட்டியில் ஏன் விளையாடவில்லை என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கான விடை கிடைத்துள்ளது. ஆம் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் அசத்தியவர்.
இந்த முதல் போட்டியில் விளையாடாத காரணம் யாதெனில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சி.பி.எல் தொடரில் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அந்த தொடரின் கடைசி போட்டியில் பங்கேற்க வில்லை. மேலும் அங்கிருந்து திரும்பிய பிராவோ பயிற்சியை மேற் கொண்டாலும் காயத்துடன் இருந்துள்ளார். அதனால் நேற்றைய போட்டியில் அவர் களம் இறங்கவில்லை.
மேலும் இத்தொடரின் ஒரு சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும் தெரிகிறது. இருப்பினும் அவருக்கு பதிலாக களமிறங்கிய இங்கிலாந்து அணியின் இளம் வீரரான சாம் கரன் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அணியின் வெற்றிக்கு தேவையான நேரத்தில் ஆறு பந்துகளை சந்தித்து 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என 18 ரன்கள் அடித்து அமர்களப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது