அக்சர் பட்டேல் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட இதுதான் காரணமா ? – வெளியான தகவல்

Axar
Advertisement

இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதில் இடம்பெற்றுள்ள சில வீரர்களின் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியின் தேர்வு குறித்த பல சர்ச்சையான விவாதங்கள் சமூகவலைதளத்தில் நடைபெற்று வருகின்றன.

அதுமட்டுமின்றி அக்டோபர் 15-ஆம் தேதி வரை இந்திய அணிக்கு மாற்றங்கள் செய்ய அவகாசம் இருப்பதால் தற்போது அணியில் மாற்றங்களை செய்ய இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமும் முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி முதல் அதிரடி மாற்றமாக தற்போது சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் அணியில் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இந்நிலையில் அக்சர் பட்டேல் இப்படி அதிரடியாக அணியில் இருந்து வெளியேற்றப்பட என்ன காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Shardul-Thakur

அதன்படி ஏற்கனவே இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ராகுல் சாஹர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கையில் நிச்சயம் அக்சர் பட்டேலுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என்று தெரியவருகிறது. அதே வேளையில் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை : மேலும் 2 வீரர்கள் காயம். அணியில் ஏற்படவுள்ள மிகப்பெரிய மாற்றம் – கடைசி நேர ட்விஸ்ட்

இதன் காரணமாக நிச்சயம் 15 பேர் கொண்ட அணியில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் அவசியம் என்ற காரணமாக ஷர்துல் தாகூர் அணியில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக ஷர்துல் தாகூர் சிறப்பாக விளையாடி அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement