ஜெயித்தே ஆக வேண்டிய முக்கிய போட்டியில் இருந்து அக்சர் படேல் விலகல் – காரணம் என்ன?

Axar Patel
- Advertisement -

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று மே 21-ஆம் தேதி நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் 63-வது லீக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டூப்ளிசிஸ் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்ததார்.

மும்பை அணிக்கெதிரான போட்டியில் அக்சர் படேல் விளையாடாதது ஏன்?

அதனைத்தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்கிற முனைப்பில் உள்ள இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமான போட்டி என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் இடம் பிடிக்காதது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

இவ்வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்துடன் விளையாடி வரும் நிலையில் அக்சர் படேல் இடம்பெறாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவு என்று கூறலாம்.

- Advertisement -

இந்நிலையில் அக்சர் பட்டேல் இப்படி இந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாதது ஏன்? என்பது குறித்து டாசின் போதே அந்த அணியின் தற்காலிக கேப்டன் டூப்ளிசிஸ் தெளிவான விளக்கங்களை கொடுத்திருந்தார். அந்த வகையில் டூப்ளிசிஸ் கூறியதாவது : இன்றைய போட்டியில் எங்களது அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் விளையாட வில்லை. ஏனெனில் கடந்த இரண்டு நாட்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த போட்டியை அவர் தவற விட்டுள்ளார்.

இதையும் படிங்க : எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி இந்த விடயத்தால் ரொம்ப கஷ்டப்படும் – விக்ரம் ரத்தோர் பேட்டி

கடந்த 5-6 ஆட்டங்களாகவே நாங்கள் சரியான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவோம். இந்த மைதானத்தில் சேசிங் செய்ய கூடுதல் சாதகம் இருக்கும் என்பதனாலே சேசிங் செய்யும் முடிவை எடுத்துள்ளோம் என டூப்ளிசிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement