இரண்டாவது போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அஷ்வின் சேர்க்கப்பட என்ன காரணம்? – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று அடிலெய்டு மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. பேட்டிங் வரிசையில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால் தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்பட என்ன காரணம் :

அதேபோன்று பந்துவீச்சு துறையை பொருத்தவரை பெர்த் போட்டியின் போது விளையாடிய வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

- Advertisement -

இப்படி ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இரண்டாவது போட்டியில் வாய்ப்பு பெற்றது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பொதுவாகவே ஆஸ்திரேலிய மைதானங்களில் சுழற்பந்து வீச்சுக்கு பெரியளவில் சாதகம் அதிகமாக இருக்காது என்பதனால் இந்திய அணி எப்போதும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடும்.

அந்த வகையில் கடந்த போட்டியின் போது அனுபவ வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை தவிர்த்து சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் சேர்க்கப்பட என்ன காரணம் யாதெனில் : ஏற்கனவே பிங்க் பால் டெஸ்டில் விளையாடிய அனுபவம் உடையவர் அஸ்வின்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஏற்கனவே அடிலெய்டு மைதானத்தில் அஷ்வின் சிறப்பான ரெகார்டுகளை வைத்துள்ளார். இதன் காரணமாகவே அஸ்வின் இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த போட்டிக்கு முன்னதாக கம்பீர் மற்றும் ரோஹித் சர்மாவுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அஸ்வின் பந்துவீச்சை தவிர்த்து பேட்டிங்கில் பெரிய அளவில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க : 50 விக்கெட்ஸ்.. கபில் தேவ், ஜஹீர் கானுக்கு நிகராக.. 22 வருடம் கழித்து பும்ரா தனித்துவ வரலாற்று சாதனை

எனவே அவரது அனுபவம் நிச்சயம் இந்த பிங்க் பால் டெஸ்டில் கை கொடுக்கும் என்பதனாலே அனுபவ வீரரான அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்து வரும் மூன்று போட்டிகளுக்கான டெஸ்ட் அணியில் நிச்சயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான தேர்வில் சுவாரசியம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement