ஆனந்த் மஹிந்திரா இந்த 6 குறிப்பிட்ட இந்திய வீரர்களுக்கு மட்டும் காரினை பரிசாக அளிக்க – காரணம் இதுதான்

Mahindra
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வி அடைந்ததை அடுத்து மீதமுள்ள போட்டிகளில் தோற்று இந்திய அணி 4 – 0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் என பலரும் கூறி வந்தனர். ஆனால் இந்த கருத்துக்களை எல்லாம் முறியடிக்கும் வகையில் சீனியர் வீரர்கள் இல்லாத இளம் படை ஆஸ்திரேலிய அணியை 2-1 என்று கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்றது.

IND-1

- Advertisement -

ரஹானே தலைமையிலான இந்திய அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்று விளையாடி இந்த வெற்றியை பெற்று கொடுத்தனர். ரோஹித், புஜாரா, ரஹானே ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் இளம் வீரர்கள் தான். அதிலும் குறிப்பாக பந்துவீச்சாளர்கள் யாரும் மூன்று போட்டிகளுக்கு அதிகமாக விளையாடவில்லை என்பது கூப்பிடத்தக்து. இருப்பினும் அவர்களின் அசத்தலான ஆட்டத்தால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியின் இளம் படை ஊதித் தள்ளியது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் முதல் இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணிக்கு வலு சேர்த்தனர். அதேபோன்று பந்துவீச்சில் சிராஜ், சைனி, நடராஜன், வாஷிங்டன் சுந்தர் என அனைவரும் பந்துவீச்சில் அசத்தினார்கள்.

அதேபோல இரண்டாவது இன்னிங்சில் போது துவக்க வீரர கில் சிறப்பாக விளையாடி 91 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் இந்த ஆறு வீரர்களையும் உற்சாகப் படுத்தும் நோக்கில் இளம் வீரர்களுக்கு ஆனந்த் மகேந்திரா அவரது தொழிற்சாலை தயாரிப்பான மஹிந்திரா தார் காரை பரிசாக அளிக்க போவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோருக்கு மஹிந்திரா தார் காரை பரிசளிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட அந்த 6 இளம்வீரர்களுக்கு மட்டும் ஏன் கார் பரிசாக அளிக்கப்பட்டது என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சைனி, சிராஜ், சுப்மன் கில், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணிக்காக இந்த ஆஸ்திரேலிய தொடரில் தான் முதன்முறையாக அறிமுகம் ஆகினர். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2018ஆம் ஆண்டு அறிமுகமான ஷர்துல் தாகூர் 10 பந்துகள் மட்டுமே வீசி நிலையில் காயமடைந்து வெளியேறியதால் மீண்டும் அவர் இந்திய அணியில் தற்போது தான் நுழைந்து முதல் போட்டியை போன்று விளையாடினார். எனவே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி அதே தொடரில் சிறப்பாக விளையாடிய இந்த ஆறு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆனந்த் மகேந்திரா இந்த பரிசினை வழங்கி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement