கைவிரித்த கம்பீர்.. குற்றச்சாட்டு கூறிய ரோஹித் மற்றும் கோலி.. அபிஷேக் நாயர் நீக்கத்திற்கு – பின்னால் இருக்கும் காரணம்

Abhishek Nayar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயர் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி அசத்தினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றத்தை சந்தித்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.

அபிஷேக் நாயரின் பதவி நீக்கத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் :

ஆனாலும் அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்றிருந்ததால் அவரை இன்னும் சில ஆண்டுகள் பயிற்சியாளராக நீடிக்க வைத்திருக்கலாம் என்ற கருத்தும் இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்த பின்னர் பிசிசிஐ அதிருப்தியில் இருந்ததாலே பயிற்சியாளர் குழுவில் சில மாற்றங்களை செய்ய நினைத்து அபிஷேக் நாயரை நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் அபிஷேக் நாயர் நீக்கப்பட்டதற்கு அது முக்கிய காரணம் இல்லை என்றும் சீனியர் வீரர்களிடையே உண்டான மோதலே காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு இடையே அபிஷேக் நாயருக்கு உறவு பலமாக இருந்தாலும் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களுன் அவருக்கு நல்ல உறவு இல்லை என்றும் அதன் காரணத்தாலே அவரது இந்த பதவிநீக்கம் நடைபெற்று உள்ளது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் பிசிசிஐ அபிஷேக் நாயரின் பணி குறித்து கருத்து கேட்டபோது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தவறான கருத்தை கூறியதால் அபிஷேக் நாயர் நீக்கப்பட்டிருக்காம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் தடுமாறும் பல வீரர்களுக்கு ஆதரவு வழங்கி அவர்களை மீண்டும் பார்மிற்கு பார்மிற்கு கொண்டு வந்த அவரை இப்படி பாதியிலேயே நீக்கியது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : கரண் சர்மாவுக்கு ஏற்பட்ட காயத்தால் விக்னேஷ் புத்தூருக்கு அடித்த ஜாக்பாட் – விவரம் இதோ

இந்திய அணியின் துணை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் கொண்டுவரப்பட்டதே கம்பீர் அளித்த ஆதரவு தான். ஆனால் பி.சி.சி.ஐ-யின் இந்த நடவடிக்கையில் கம்பீரும் அமைதியாக இருந்து விட்டாதாலே இந்த நீக்கம் நடைபெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Advertisement