புதிதாக ஒரு அணி தான் இந்தாண்டு ஐ.,பி.எல் சாம்பியனாக அதிக வாய்ப்பு – வெளியான சுவாரசிய தகவல்

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் எட்டாம் தேதி வரை நடக்க இருக்கிறது. முன்னதாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்தது. ஆனால் எதிர்பாராத கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட இருக்கிறது.

Ipl cup

- Advertisement -

அதன்படி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் 19ம் தேதி துவங்கி நவம்பர் எட்டாம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் என்று அதிகாரபூர்வமான தகவலை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படெல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். மேலும் ஐபிஎல் குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை நாளை அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர்பான விதிமுறைகள், வீரர்களின் பயணம், போட்டி விதிமுறைகள் என முழு விவரங்களும் நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே இப்போதே இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான புதிய புள்ளி விவரம் ஒன்று சுவாரசியமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

mumbai

அது யாதெனில் இதுவரை ஐபிஎல் சாம்பியனாக அதிகமுறை மும்பை இந்தியன்ஸ் நான்கு முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறையும் கோப்பையை கைப்பற்றி உள்ளனர். ஆனால் இம்முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த தொடரில் மும்பை மற்றும் சிஎஸ்கே அணி இல்லாது வேறு ஒரு புதிய அணி கோப்பையை கைப்பற்றும் என்று இந்த தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதற்கு காரணம் யாதெனில் இதுவரை லீப் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதாவது (2008,12,16) ஆகிய தொடர்களில் புதிய அணிகளே கோப்பையை கைப்பற்றி உள்ளனர். 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியின் முதல் முறையாகவும், 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி முதல் முறையாகவும், 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

Rcb

அதே போன்று தற்போது லீப் வருடம் ஆன 2020ஆம் ஆண்டு புதிய அணி ஒன்றே கோப்பையை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. அதன்படி ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகளில் ஏதாவது ஒரு அடி தான் கோப்பையை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. அதனால் இம்முறை எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement