ஐ.பி.எல் அணிக்காக விளையாடி அதே அணிக்கு பயிற்சியாளராக மாறிய 5 வீரர்கள் – விவரம் இதோ

Dravid
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை 12 தொடர்ந்து நடைபெற்று முடிந்துள்ளது. இந்த வருடத்தின் ஐபிஎல் நடக்குமா? என்ற சந்தேகத்தில் தான் அனைவரும் இருக்கிறோம். கடந்த 12 வருடங்களாக பல ஜாம்பவான்கள் ஐபிஎல் அணிகளுக்காக விளையாடுகின்றனர்.

அதே நேரத்தில் ஒரு அணிக்காக விளையாடி விட்டு அதே அணிக்கு பயிற்சியாளராக மாறியுள்ளனர் அப்படிப்பட்ட 5 வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்

- Advertisement -

Fleming 1

ஸ்டீபன் பிளமிங் :

சென்னை சூப்பர் கிங்ஸ் இவர் 2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 196 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு தனது ஐபிஎல் தொடர் வாழ்க்கையை முடித்துக்கொண்டு அந்த அணிக்கு பயிற்சியாளராக மாறிவிட்டார். இவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை கைப்பற்றி 10 முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்றும் 6 இறுதிப்போட்டிக்கு சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் :

மும்பை இந்தியன்ஸ் இவர் 2 ஐபிஎல் தொடரில் ஆடினார். முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர். அதன்பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறினார். மேலும், 2 வருடங்கள் அந்த அணிக்கு கேப்டனாக இருந்தார். அதன் பின்னர் ரோகித் சர்மாவை கேப்டன் ஆக்கிவிட்டு அந்த அணியில் இருந்து வெளியேறி அதே அணிக்கு 2015ம் ஆண்டு பயிற்சியாளராகவும் மாறினார். அதன் பின்னர் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

- Advertisement -

Ponting

டேனியல் வெட்டோரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :

இவரும் 2 ஐபிஎல் அணிகள் விளையாடி உள்ளார். முதல் 4 வருடங்கள் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியவர். அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். ஒரு வருடம் கேப்டனாக இருந்தார் . 2013ஆம் ஆண்டு விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஓய்வு பெற்றார். பின்னர் 3 வருடங்கள் பெங்களூரு அணிக்கு பயிற்சியாளராக இருந்து ஒரே ஒருமுறை பிளே ஆப் சுற்றுக்கு அந்த அணியை பயிற்சியாளராக கொண்டு சென்றார்.

- Advertisement -

ஜாக்கஸ் காலிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் 98 போட்டிகளில் விளையாடி 2427 ரன்களை குவித்துள்ளார். மேலும், 65 விக்கெட்டுகளையும் எழுதியுள்ளார். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெற்ற விட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் மாறினார் ஜாக்கஸ் காலிஸ்.

பிரெண்டன் மெக்கல்லம் :

கொல்கத்தா அணிக்காக முதல் தொடரிலேயே அறிமுகமான அவர் முதல் போட்டியிலே 175 ரன்களை குவித்தார். அதன்பின்னர் சில ஆண்டுகள் பெங்களூரு மற்றும் சென்னை அணிக்காக விளையாடிய இவர் தற்போது கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement