திறமை இருந்தும் சொந்த நாட்டில் மதிப்பில்லாமல் வெளிநாட்டில் விளையாடி சூப்பர்ஸ்டார் ஆன வீரர்கள் – லிஸ்ட் இதோ

Player
- Advertisement -

இந்தியாவில் மட்டும்தான் ஒரு கிரிக்கெட் வீரர் இந்திய நாட்டிற்கு மட்டுமே விளையாடி வருகிறனர். ஆனால் மேலை நாடுகளிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் ஒரு வீரர் தன் நாட்டிற்காகவும், வேறு ஒரு நாட்டிற்காகவும் ஒப்பந்த அடிப்படையில் விளையாடலாம். அப்படி தனது நாட்டிற்காகவும், மற்றொரு நாட்டிற்காகவும் விளையாடிய வீரர்கள் பட்டியலைப் பார்ப்போம்.

Trott

- Advertisement -

ஜொனாதன் ட்ராட் :

இவர் இங்கிலாந்து வீரர். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இங்கிலாந்து அணி அதிகப்படியான தென்னாப்பிரிக்கா வீரர்களை தனது நாட்டிற்காக ஆட வைத்துள்ளது. தென்னாபிரிக்காவிற்கு 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பின்னர் 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு சென்று அந்த நாட்டிற்காக விளையாட தொடங்கிவிட்டார்.

Ronchi
.
லோக் ராஞ்சி :

இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு அணிகளுக்காக விளையாடிய ஒரு வீரர் ஆவார். 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக நான்கு ஒருநாள் போட்டிகளிலும், 3 டி20 இரண்டு போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் விக்கெட் கீப்பர் என்பதால் ஆஸ்திரேலியாவில் சரியான இடம் கிடைக்கவில்லை. அதன் பின்னர் 2013 இல் இருந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Archer

ஜோப்ரா ஆர்ச்சர் :

தற்காலத்தில் நம் கண்முன்னே இருக்கும் சாட்சியாகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ஆடியவர். அதன் பின்னர் இங்கிலாந்து சென்று தனது திறமையை பயன்படுத்தி தற்போது இங்கிலாந்தின் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

tahir

இம்ரான் தாகிர் :

இவர் பாகிஸ்தானில் பிறந்து பாகிஸ்தான் நாட்டிற்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர். அங்கு சுழற்பந்து வீச்சாளர் என்பதால் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு 2011-ஆம் ஆண்டிலிருந்து தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார்.

Advertisement