3-வது ஒருநாள் போட்டி நடக்கும் கேப்டவுன் மைதானம் ஒரு பார்வை – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

CapeTown
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என இழந்த இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தையும் கோட்டை விட்டது. அதன்பின் தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் மீண்டும் பரிதாப தோல்வி அடைந்த இந்தியா ஒருநாள் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. தரமான வீரர்கள் இருந்தபோதிலும் அனுபவமில்லாத தென்னாப்பிரிக்காவிடம் இப்படி அடுத்தடுத்து தோல்விகளை இந்தியா சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

vanderdussen

- Advertisement -

வைட்வாஷ் தோல்வியை தவிர்க்குமா:
இதையடுத்து இந்த ஒருநாள் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி ஜனவரி 23 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்க உள்ளது. குறைந்தபட்சம் இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வியை இந்தியா தவிர்க்குமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த போட்டியை முன்னிட்டு போட்டி நடைபெறும் கேப்டவுன் கிரிக்கெட் மைதானம் பற்றி பார்க்கலாம்.

கேப் டவுன்:
இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தென்னாபிரிக்காவின் “கேப் டவுன் நகரில் இருக்கும் நியூலேண்ட்ஸ்” கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. பின்புறத்தில் அழகிய மலை தொடர்களுடன் காட்சி அளிக்கக் கூடிய இந்த மைதானத்தில் கடந்த 1992 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

kohli 1

மைதானம் ஒரு பார்வை:
இந்த மைதானத்தில் வரலாற்றில் இதற்கு முன் இந்தியாவும் தென்ஆப்பிரிக்காவும் 4 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் தென்ஆப்பிரிக்கா 2 போட்டிகளிலும் இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளன.

- Advertisement -

இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்:
1. விராட் கோலி : 188 ரன்கள் (2 போட்டிகள்)
2. சௌரவ் கங்குலி : 107 ரன்கள் (1 போட்டி)
3. ராகுல் டிராவிட் : 95 ரன்கள் (2 போட்டிகள்)

Kohli

இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்கள்:
1. ஜவகள் ஸ்ரீநாத் – 12 விக்கெட்கள் (2 போட்டிகள்)
2. அனில் கும்ப்ளே – 11 விக்கெட்கள் (3 போட்டிகள்)
3. ஜஸ்பிரித் பும்ரா – 10 விக்கெட்கள் (2 போட்டிகள்)
இந்த மைதானத்தில் வரலாற்றில் இந்தியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் : 303/6, 2018.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட் :
இந்த போட்டியின்போது கேப்டவுன் நகரில் வானம் மேக மூட்டமின்றி நீலவானத்துடன் காட்சி அளிக்கும் என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 மெகா ஏலம் : 2 கோடிகள், 1.5 கோடிகள், 1 கோடிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் – மொத்த லிஸ்ட் இதோ

பிட்ச் ரிப்போர்ட்:
கேப் டவுன் மைதானத்தில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புகள் அதிகம். அதேசமயம் இந்த வேகத்தால் நிதானத்துடன் விளையாடும் பேட்ஸ்மென்கள் ரன்களை எளிதாக குவிக்கலாம். இருப்பினும் இம்மைதானத்தில் சுழல் பந்துவீச்சு எடுபடுவது சற்றுக் கடினமாகும். இம்மைதானத்தில் சராசரி ஸ்கோர் 270 – 280 என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் சேசிங் தேர்வு செய்வது நல்லது. மொத்தத்தில் கிட்டத்தட்ட 300 ரன்களுடன் ரன் மழை பொழியக்கூடிய போட்டியாக இந்த போட்டி இருக்கும்.

Advertisement