மீதமுள்ள 31 போட்டிகள். வெளிநாட்டு வீரர்களின் நிலைமை ? ஐ.பி.எல் தொடரின் அடுத்த அப்டேட் – முழு விவரம் இதோ

ipl
- Advertisement -

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கிய ஐ.பி.எல் தொடரானது பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னை அணியில் உள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இந்த கடினமான முடிவை பிசிசிஐ நேற்று எடுத்துள்ளது. ஐபிஎல் தொடர் நடத்தினால் நிச்சயமாக அனைத்து வீரர்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். அவர்களது பாதுகாப்பு மிக மிக முக்கியம், எனவே வேறு வழியில்லாமல் பிசிசிஐ இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐ அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் அவர்களது நாடுகளுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிறகு அவர்களது வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பப்படுவார்கள். ஆனால் தற்போது எழுந்துள்ள மிகப் பெரிய தலைவலி வெளிநாட்டு வீரர்களை எவ்வாறு பாதுகாப்பாக அவர்களது நாடுகளுக்கு வழி அனுப்பி வைப்பது என்று தான்.

பிரிட்டன், நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் தங்கள் நாட்டு வீரர்களை குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு பிறகு அனுப்புங்கள் என்று உத்தரவு அளித்துள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அரசாங்கம் மே 15ம் தேதி வரை அவர்களது ஊருக்கு செல்லும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து பேசிய ராஜீவ் சுக்லா அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டு, நல்ல உடல் நிலையுடன் அவர்களது ஊர்களுக்கு வழியனுப்பி வைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Cummins

மேலும் இது சம்பந்தமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், கூடிய சீக்கிரம் அனைத்து வீரர்களும் அவர்களது ஊர்களுக்கு பாதுகாப்பாக செல்வார்கள் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் மீதியுள்ள 31 ஐபிஎல் போட்டிகளை இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக செப்டம்பர் மாதத்தில் வைத்து நடத்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

IPL

அப்போது உள்ள சூழ்நிலையில் நிலைமை சரியாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக ஐபிஎல் தொடர் மறுபடியும் செப்டம்பர் மாதத்தில் வைத்து நடத்தி முடித்த பின்னர், ஆண்களுக்கான டி20 உலக கோப்பை தொடர் நடைபெறும் என்கிற செய்தி தெரியவந்துள்ளது.

Advertisement