இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் தலைவராக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பதவி வகித்த வேளையில் கடந்த ஆண்டு அவர் அந்த பதிவில் இருந்து விலகியதால் புதிய பிசிசிஐ தலைவராக முன்னாள் இந்திய வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டு தற்போது பிசிசிஐ-யின் தலைவராக பணியாற்றி வருகிறார். மேலும் இந்திய கிரிக்கெட் எழுச்சிக்காக சில முக்கிய நடவடிக்கைகளையும் அவர் திறம்பட மேம்படுத்தி வருகிறார்.
ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா :
இருப்பினும் பிசிசிஐ-யின் செயலாளரான ஜெய் ஷா இதுவரை இந்திய அணியின் அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் முக்கிய காரணியாக இருந்து வருகிறார். குறிப்பாக வீரர்களுக்கு பரிசு வழங்குவது, போட்டி அட்டவணையை திட்டமிடுவது, வீரர்கள் தேர்வில் கவனம் செலுத்துவது, தேர்வுக்குழுவினருடன் கலந்துரையாடுவது என அற்புதமாக பணியாற்றி வந்துள்ளார்.
அதோடு இந்திய அணி முக்கிய தொடர்களில் பங்கேற்கும் போதெல்லாம் அவர்களுடன் பயணிப்பது என இந்திய அணியுடனே ஜெய் ஷா பயணித்து வருகிறார். இப்படி பிசிசிஐ-யின் செயலாளராக திறம்பட செயல்பட்டு வந்த அவர் ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் தலைவராக இருக்கும் கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து அவர் அந்த பதிவில் நீடிக்க விரும்பவில்லை என்பதால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஐசிசி உள்ளது.
இந்நிலையில் இந்த ஐசிசி தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும் மத்திய உள்துறை அமைச்சரின் மகன் ஜெய் ஷா போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ஆதரவும் பலமாக உள்ளதால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 2024 டி20 உ.கோ அணியில் கழற்றி விட்டப்போ ரோஹித் சர்மா அந்த வாக்குறுதி கொடுத்தாரு.. ரிங்கு சிங் பேட்டி
ஒருவேளை அப்படி அவர் ஐசிசி தலைவர் பதவிக்கு சென்று விட்டால் பிசிசிஐ நிர்வாகத்தின் செயலாளர் பதவிக்கு அருண் ஜேட்லீயின் மகன் ரோகன் ஜேட்லி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் ரோகன் ஜேட்லி நிர்வாகத்தை அற்புதமாக கையாளக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



