2024 டி20 உ.கோ அணியில் கழற்றி விட்டப்போ ரோஹித் சர்மா அந்த வாக்குறுதி கொடுத்தாரு.. ரிங்கு சிங் பேட்டி

- Advertisement -

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் கடந்த வருடம் முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பல வருடங்களாக பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் கடந்த வருடம் குஜராத்துக்கு எதிராக கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அந்த வாய்ப்பில் 2023 அயர்லாந்து டி20 தொடர், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2023 தென்னாபிரிக்க டி20 தொடர், 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடர்களில் ரிங்கு மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் தோனிக்கு பின் சிறந்த ஃபினிஷர் கிடைத்து விட்டதாக ரசிகர்கள் அவரை பாராட்டினர்.

- Advertisement -

கழற்றி விடப்பட்ட ரிங்கு:

அதனால் 2024 டி20 உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விளையாட ரிங்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே தேர்ந்தெடுத்தது. அதனால் ஏராளமான ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் தேர்வுக்குழுவை விமர்சித்தனர்.

அப்போது எந்த தவறும் செய்யாத ரிங்கு சிங்கை 11 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் தேர்ந்தெடுக்கவில்லை என்று அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்காதது பற்றி கேப்டன் ரோஹித் சர்மா தம்மிடம் பேசியதாக ரிங்கு சிங் கூறியுள்ளார். அப்போது ஒவ்வொரு 2 வருடத்திற்கும் ஒருமுறை டி20 உலகக் கோப்பை நடைபெறுவதால் அடுத்த முறை உங்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று ரோஹித் வாக்குறுதி கொடுத்ததாகவும் ரிங்கு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரோஹித் கொடுத்த உறுதி:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் என்னிடம் வந்து நிலைமைகளை எடுத்துச் சொல்லி அது பரவாயில்லை என்று புரிய வைத்தார். நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள் இன்னும் நிறைய உலககோப்பை வருங்காலங்களில் வரும். எனவே அதில் விளையாட கடினமாக உழைத்துக் கொண்டிருங்கள் என்று ரோஹித் என்னிடம் கூறினார். ஏமாற்றமடையாமல் 2 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பையில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார்”

இதையும் படிங்க: நியாயமான மறுவாய்ப்பை மறந்துடாதீங்க.. என்னோட கம்பேக்கை தமிழ்நாட்டில் தொடங்குறேன்.. சூரியகுமார் கோரிக்கை

“ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை நான் விரும்புகிறேன். அதே போல விராட் கோலியும் எனக்கு பிடிக்கும். ஏனெனில் அணியை வழி நடத்துவதற்கு அதிரடியும் ஆக்ரோஷமும் அவசியம். எனவே அதைக் கொண்டிருந்த விராட் கோலியின் கேப்டன்ஷிப் மிகச்சிறப்பாக இருந்தது” என்று கூறினார். இதைத்தொடர்ந்து 2026 டி20 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்பதால் நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement