நியாயமான மறுவாய்ப்பை மறந்துடாதீங்க.. என்னோட கம்பேக்கை தமிழ்நாட்டில் தொடங்குறேன்.. சூரியகுமார் கோரிக்கை

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அறிமுகமானது முதலே டி20 கிரிக்கெட்டில் மைதானத்தின் நாலாபுறமும் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கிய அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் இந்தியாவின் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பாராட்டுகளையும் பெற்ற அவர் தரவரிசையிலும் நீண்ட நாட்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார்.

இருப்பினும் கொஞ்சம் மெதுவாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் ஆரம்பம் முதலே தடுமாறினார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான அவர் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் மோசமாக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு காரணமானார். அதனால் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமித்தாலும் அவரை தேர்வுக்குழு ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

- Advertisement -

மறுவாய்ப்புக்காக சூரியகுமார்:

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தாம் இந்தியாவுக்காக விளையாட விரும்புவதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். அதற்காக தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் புஜ்ஜி பாபு உள்ளூர் தொடரிலும் அடுத்த நடைபெறும் துலீப் கோப்பையிலும் விளையாட உள்ளதாக சூரியகுமார் அறிவித்துள்ளார். மேலும் 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் சூரியகுமார் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ஆனால் அப்போட்டியில் 8 ரன்களில் அவுட்டான அவர் அதன் பின் காயமடைந்து வெளியேறினார். எனவே தமக்கு நேரம் வரும் போது மறுவாய்ப்பு கொடுங்கள் என்றும் அஜித் அகர்கர், கௌதம் கம்பீர்
ஆகியோரிடம் சூரியகுமார் மறைமுகமாக கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற நிறைய வீரர்கள் கடினமாக உழைத்து வருகிறார்கள்”

- Advertisement -

சவாலான டெஸ்ட்:

“நானும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமான பின் நான் காயத்தை சந்தித்தேன். அதன் பின் வாய்ப்பு பெற்ற வீரர்கள் நன்றாக விளையாடியுள்ளனர். எனவே தற்சமயத்தில் அவர்கள் வாய்ப்பு பெறுவதற்கு தகுதியானவர்கள். வருங்காலத்தில் நான் விளையாடுவேனா என்பது எனது கட்டுப்பாட்டில் இல்லை. தற்போது புஜ்ஜி பாபு மற்றும் துலீப் கோப்பையில் விளையாட உள்ளேன். பின்னர் நடப்பதை பார்ப்போம்”

இதையும் படிங்க: சச்சின், டிராவிட் மாதிரி விராட், ரோஹித்தால் இந்தியாவுக்காக இதை செய்ய முடியும்.. சஞ்சய் பங்கர் உறுதி

“டெஸ்ட் போட்டிகள் கொஞ்சம் சவாலானது. அதில் டி20 போல விளையாட முடியாது. ஒரு நேரத்தில் ஒரு அடியை மட்டுமே முன்னோக்கி வைக்க வேண்டும். அதே சமயம் அதிரடியான எண்ணம் மற்றும் பாடி லாங்குவேஜை களத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறினார். இருப்பினும் சூர்யகுமாரை டி20 ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே பார்ப்பதாக சமீபத்தில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement