சச்சின், டிராவிட் மாதிரி விராட், ரோஹித்தால் இந்தியாவுக்காக இதை செய்ய முடியும்.. சஞ்சய் பங்கர் உறுதி

- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர். அதில் சச்சின் இடத்தை நிரப்பும் அளவுக்கு விராட் கோலி 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். அதே போல ரோஹித் சர்மாவும் சிறந்த துவக்க வீரராக அசத்தி வருகிறார்.

குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவியினர். அதே போல விராட் கோலியும் முக்கியமான இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் சரித்திர வெற்றியில் பங்காற்றினார். அந்த வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து அவர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

- Advertisement -

விராட், ரோஹித் ஓய்வு:

தற்போது 36 வயதை கடந்து விட்டதால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். அதே சமயம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளோம் என்றும் விராட் மற்றும் ரோஹித் சர்மா அறிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் 39, 40 வயதில் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போல விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 40 வயது வரை இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தன்னுடைய உடல் மற்றும் ஃபிட்னஸ் அனுமதிக்கும் வரை ரோஹித் சர்மா விளையாடுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் 40 வயது வரை விளையாடிய சச்சின், டிராவிட் போன்ற தரத்தை அவர் கொண்டுள்ளார்”

- Advertisement -

40 வயது வரை:

“தற்போது முன்பை விட ஃபிட்னஸ் வசதிகள் இருக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் உதவி செய்கிறார்கள். அதனால் வீரர்களின் கேரியர் நீள்கிறது. விராட் கோலியும் தனது உடலை பொறுத்து விளையாடுவார். டெஸ்ட் போட்டிகள் தான் நீங்கள் விடைபெறும் கடைசி ஃபார்மட்டாக இருக்கும். எனவே விராட் கோலி இன்னும் 5 வருடங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை பார்க்க முடியும்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் அற்புதமான சாதனையை நிகழ்த்திய முஷ்பிகுர் ரஹீம் – மெஹதி ஹசன் ஜோடி

“2015, 2019, 2023 ஆகிய 3 உலகக் கோப்பைகளிலுமே இந்தியா அற்புதமாக விளையாடியது. கடந்த முறை ஆஸ்திரேலியா ஃபைனலில் நம்மை விட சிறப்பாக விளையாடியது. தற்போது டி20 உலகக் கோப்பையை வென்று ருசியை பார்த்த ரோஹித் சர்மா டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற அடுத்த வெற்றிகளை முன்னோக்கி இருப்பார். இப்போதெல்லாம் ஐசிசி தொடர்கள் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. எனவே உலகக் கோப்பையை வென்றால் தான் ரோஹித் ஓய்வு பெறுவார் என்ற எந்த கட்டாயமும் கிடையாது” எனக் கூறினார்.

Advertisement