இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு ? சி.எஸ்.கே வா ? சன் ரைசர்ஸ்ஸா ? – ஓர் அலசல் இதோ

cskvssrh
- Advertisement -

புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருக்கும் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கான போட்டி இன்று நடைபெற இருக்கிறது. சென்னை அணி மூன்று போட்டிகள் விளையாடி இரண்டு போட்டியில் தோல்வியடைந்து, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ஹைதராபாத் அணிக்கும் இதே நிலைமை தான்.

cskvssrh

- Advertisement -

இந்த இரண்டு அணிகளும் இன்று மோதப் போகிறது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 12 முறை ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கின்றனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறது.மொத்தம் ஒன்பது முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது. ஹைதராபாத் அணி 3 முறை மட்டுமே வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளது.

இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து சென்னை அணியின் துவக்க வீரர்கள் எப்போதும் சொதப்பி வருகிறார்கள். அம்பத்தி ராயுடு வந்துவிட்டால் மிடில் ஆர்டர் அந்த அணியில் மிகச்சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பின்வரிசையிலும் பேட்டிங் தெரிந்த பவுலர்கள் ஓரளவுக்கு நன்றாகத்தான் விளையாடி வருகிறார்கள்.

bravo

ஹைதராபாத் அணியை எடுத்துக் கொண்டால் அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆடினால் மட்டுமே அந்த அணிக்கு வெற்றி கிடைக்கும். வழக்கம் போல் இந்தாண்டும் சன் ரைசர்ஸ் அணி பந்துவீச்சில் எப்போதும் போல் பலம் வாய்ந்த அணியாக தான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் எந்த அணி வெற்றி பெறுகிறது என்று.

natarajan

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement