இனிவரும் ஐ.பி.எல் தொடர்களில் கூட முறியடிக்க முடியாத 3 சாதனைகள் – விவரம் இதோ

- Advertisement -

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 29ம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது பெயரளவிலான தேதியாக இருந்தாலும் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் இந்த வருடம் நடக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், பிசிசிஐ எப்படியாவது ஐபிஎல் தொடரை நடத்திவிடலாம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறது.

Ipl cup

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் நடக்கும்போது பல சாதனைகளை முறியடிக்கப்படும். புதிய சாதனைகள் படைக்கப்படும். இந்நிலையில் தற்போது வரை ஐபிஎல் தொடரில் முறியடிக்க முடியாத 3 சாதனைகளை கீழே கொடுத்துள்ளோம்.

1. கிறிஸ் கெய்ல் – ஒரு இன்னிங்ஸில் 175 ரன்கள்

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக கிறிஸ் கெய்ல் 2013 ஆம் ஆண்டில் ஆடியபோது புனே அணிக்கு எதிராக ருத்ர தாண்டவத்தை ஆடினார். அந்த அணிக்கு எதிராக பேயடி அடித்து 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார். இந்த சாதனையுடன் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த சாதனையும் இவருக்கு சொந்தமானது. டி20 ஆட்டத்தில் 175 ரன்கள் என்பது தற்போது வரை எந்த ஒரு டி20 வீரராலும் முறியடிக்க முடியாத சாதனையாக இருக்கிறது.

- Advertisement -

ChrisGayle

2. விராட் கோலி – ஒரு சீசனில் 973 ரன்கள்

பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி 2016 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 973 ரன்களை குவித்தார். இதன் சராசரி 83 ஆகும். இவரது இந்த அபாரமான ஆட்டத்தால் பெங்களூர் அணி இந்த தொடரில் இறுதிப் போட்டி வரை சென்றது. இதே தொடரில் 4 சதம் விளாசினார் விராட் கோலி. இதுபோன்று ஒரே சீசனில் 900 ரன்களுக்கு மேல் கிறிஸ் கெயில் போன்ற ஜாம்பவான்களலேயே அடிக்க முடியாத ஒரு நிலை தற்போது வரை உள்ளது.

- Advertisement -

3. கிறிஸ் கெய்ல் – ஒரே ஓவரில் 37 ரன்கள்

2011ம் ஆண்டே பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல் கொச்சி டஸ்கேர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பரமேஸ்வரனின் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசினார். இந்த ஓவரில் ஒரு நோபால் வீசப்பட்டது. இதன் காரணமாக 37 ரன்கள் விளாசப்பட்டது. தற்போது ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசினால் கூட இந்த சாதனையை முறியடிக்க முடியாது.

kohli

இந்த சாதனைகள் அனைத்தும் நிச்சயம் முறியடிக்க சாத்தியம் இல்லாத சாதனைகளாக இன்றளவும் பார்க்கப்படுகிறது. மேலும் உலக அளவில் நடைபெற்று வரும் டி20 லீக் தொடர்களையும் கணக்கில் கொண்டே இந்த சாதனை பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement