IPL 2022 : மெகா ஏலத்திற்கு முன்னர் ராஜஸ்தான் அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் – 4 பேருமே டாப் பிளேயர்ஸ் தான்

RR
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதன் பின்னர் தற்போது அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் சேர்த்து 10 அணிகள் இந்த தொடரில் விளையாட இருக்கின்றன. இதற்கான அணிகளின் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. லக்னோ மற்றும் அஹமதாபாத் தலைமையிலான புதிய அணிகள் அடுத்த தொடரில் விளையாட இருக்கின்றன.

csk vs rr

- Advertisement -

இந்த தொடருக்காக அனைத்து அணிகளின் வீரர்களும் கலைக்கப்பட்டு தற்போது மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் ரீடெயின் செய்ய உள்ள நான்கு வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தற்போது அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தாங்கள் தக்கவைக்கும் வீரர்களை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. கேப்டனாக அந்த அணியின் சஞ்சு சாம்சன் தொடர்வார் என்றும் அவர் தனது கான்ட்ராக்ட்க்கு ஒப்புக்கொண்டதாகவும் ராஜஸ்தான் நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Samson

மேலும் அவரை தொடர்ந்து வெளிநாட்டு வீரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. மேலும் மற்றொரு இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தக்க வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இவர்கள் நால்வரே ராஜஸ்தான் அணியால் தங்க வைக்கப்படுகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : அஷ்வின் மாதிரி இப்படி ஒரு பவுலர் பந்துவீசி நான் பார்த்ததே இல்ல – டேனியல் வெட்டோரி புகழாரம்

கடந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிரீஸ் மோரிஸ் மற்றும் முன்னணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. சஞ்சு சாம்சன் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 40.33 ரன்கள் சராசரியுடன் 484 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அவரது தலைமையின் கீழ் ராஜஸ்தான் அணியை பலப்படுத்தும் முயற்சியில் நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது.

Advertisement