வெற்றியுடன் விடைபெற்றார் நியூஸி ஜாம்பவான் ராஸ் டெய்லர் ! அவர் படைத்துள்ள சாதனைகளின் பட்டியல் இதோ

Taylor
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது. அந்த தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற வங்கதேசம் உலக டெஸ்ட் சாம்பியனாக விளங்கும் நியூசிலாந்தை வரலாற்றிலேயே முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்து சரித்திர சாதனை வெற்றியை பதிவு செய்தது.

taylor 1

- Advertisement -

இதை அடுத்து நேற்று நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை புரட்டி எடுத்து மெகா வெற்றியை பெற்ற நியூஸிலாந்து முதல் டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்த்ததுடன் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 1 – 1 என சமன் செய்து அசத்தியது.

விடைபெற்றார் ராஸ் டய்லர்:
இந்த போட்டியுடன் நியூசிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர அனுபவ வீரர் ராஸ் டெய்லர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார், வங்கதேசத்திற்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யாரும் எதிர்பாரா வண்ணம் அந்த அணியின் கடைசி விக்கெட்டை எடுத்த அவர் “விக்கெட்டுடன்” விடைபெற்றார்.

Taylor

கடந்த 2007ஆம் ஆண்டு முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட துவங்கிய அவர் அதன் பின் படிப்படியாக வளர்ந்து கடந்த 15 வருடங்களாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக விளையாடி வருகிறார், குறிப்பாக இப்படி ஒரு தரமான வீரரை பெற்றதால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வலுவாக இருந்து வந்தது என்றே கூறலாம்.

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்:
முன்னாள் வீரர்கள் ஸ்டீபன் பிளெமிங், ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோருக்கு பின் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற நியூசிலாந்து பேட்டிங் வீரராக வலம் வந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணியில் முக்கிய வீரராக இருந்தவர்.

நியூஸிலாந்துக்குக்காக பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றி உள்ள இவர் ஒரு டெஸ்ட் சாம்பியனாக தனது 37வது வயதில் சொந்த நாட்டு மண்ணில் குடும்பம் மற்றும் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து பிரியாத மனதுடன் விடை பெற்றுள்ளார்.

- Advertisement -

சாதனைகளின் பட்டியல்:
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றுள்ள இந்த தருணத்தில் கிரிக்கெட்டில் அவர் படைத்துள்ள முக்கிய சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

1. அதிக ரன்கள் : டெஸ்ட் கிரிக்கெட்டில் 7684 ரன்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 8576 ரன்கள், டி20 கிரிக்கெட்டில் 1909 ரன்கள் என மொத்தம் 18,169 ரன்களை குவித்துள்ள ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

2. அதிக சதங்கள்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 சதங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதங்கள் என மொத்தம் 40 சதங்களை விளாசி உள்ள இவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

3. ஒன் டே கிங்: 8576 ரன்கள் மற்றும் 21 சதங்கள் அடித்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து பேட்டர் என்ற சாதனையையும் ராஸ் டைலர் செய்துள்ளார்.

4. டெஸ்ட் கிங் : 7684 ரன்கள் மற்றும் 19 சதங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் மற்றும் அதிக சதங்கள் விளாசிய 2வது நியூசிலாந்து வீரர் என்ற சாதனைகளையும் அவர் தன் வசம் வைத்துள்ளார்.

இத்துடன் 163 கேட்ச்களை பிடித்துள்ள இவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த 2வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

5. அதிக போட்டிகள்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை டேனியல் வெட்டோரி உடன் பகிர்ந்து கொண்டுள்ளார், ராஸ் டைலர் மற்றும் வெட்டோரி ஆகிய இருவருமே தலா 112 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்துக்காக விளையாடியுள்ளனர்.

6. மறக்க முடியாத 290 : கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் வாகா மைதானத்தில் அந்த அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 290 ரன்களை விளாசிய ராஸ் டைலர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.

இந்த 290 ரன்களானது சவால் மிகுந்த “ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு வெளிநாட்டு பேட்டர் பதிவு செய்த அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்” ஆகும்.

7. அசைக்க முடியாத ராஸ் : அவர் அடித்த 40 சர்வதேச சதங்களில் 19 சதங்களின் போது அவுட் ஆகாமல் இருந்துள்ளார், இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவுட் ஆகாமல் அதிக சதங்கள் விளாசிய நியூஸிலாந்து பேட்டர் என்ற பெருமையையும் ராஸ் டெய்லர் தன் வசமாக்கி உள்ளார்.

Advertisement