முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதிலாக தேர்வாக வாய்ப்புள்ள வீரர்கள் – யார் யார் தெரியுமா?

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வட்டத்திற்குள் நடைபெறுவதால் இரு அணிகளுக்குமே இது ஒரு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடுவதற்காக ஏற்கனவே ஹைதராபாத் சென்றடைந்த இரண்டு அணி வீரர்களும் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி திடீரென முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே கோலி விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் சொந்த காரணங்களால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார் என்றும் அவருக்கான பிரைவசியை ஊடகத்தாரும், ரசிகர்களும் மதிக்க வேண்டும் என்றும் அவரைப் பற்றி தவறான கருத்துக்களை பகிர வேண்டாம் என்றும் பி.சி.சி.ஐ கேட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான டெஸ்ட் அணியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக எந்த வீரர் அவரது இடத்தில் தேர்வு செய்யப்படுவார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் சமீப காலமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இளம் வீரர்களை ஆதரித்து வரும் வேளையில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் விராட் கோலிக்கு பதிலாகவும் ஒரு இளம் வீரரே அந்த இடத்திற்காக தேர்வு செய்யப்படுவார் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் தற்போதைய இந்திய அணியில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப உள்ளூர் கிரிக்கெட்டில் அற்புதமாக செயல்பட்டு வரும் ரஜத் பட்டிதார், அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் சர்பராஸ் கான் போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான வாய்ப்பிற்காக காத்திருப்பதால் அவர்களில் ஒருவரே இந்த இடத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : பிக்பேஷ் 2024 : 10 ஃபோர்ஸ் 12 சிக்ஸ்.. கெயிலின் மாஸ் சாதனையை நொறுக்கி வெறியாட்டம் போட்ட ஆஸி வீரர்

அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக முதல்தர கிரிக்கெட்டில் அற்புதமாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கானை இந்திய அணி தேர்வு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement