இந்த ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள், அதிக சிக்ஸ் மற்றும் அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் – லிஸ்ட் இதோ

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இத்தொடர் முழுவதும் மூன்று மைதானங்களில் மட்டுமே நடப்பதால் ஒவ்வொரு அணியும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து ஆடிக்கொண்டிருக்கிறது. எப்போதும் இல்லாத வகையில் டெல்லி, பெங்களூரு போன்ற அணிகள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மும்பை அணி முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது இடத்திலும் இருக்கிறது.

CSKvsMI

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 7 போட்டிகளில் விளையாடி தொடரின் ஒரு பாதி முடிவடைந்து விட்டது. தற்போது வரை அதிக சிக்சர் மற்றும் அதிக பவுண்டரி அடித்த வீரர்களின் பட்டியலைப் பார்ப்போம். இந்த பட்டியலில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் கேஎல் ராகுல் 1 சதம் மற்றும் 3 அரைசதம் அடித்து 387 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் 337 ரன்களுடன் அகர்வால் 2 ஆம் இடத்தில் உள்ளார்.

அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் கேஎல் ராகுல் 37 பவுண்டரி முதலிடத்திலும், மயாங்க் அகர்வால் 34 பவுண்டரி, சூர்யகுமார் யாதவ் 33 பவுண்டரி, பாப் டு பிளசிஸ் 29 பவுண்டரி, தேவ்தத் படிக்கல் 25 பவுண்டரி, வாட்சன் 23 பவுண்டரி என அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

Rahul

அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் 16 சிக்ஸ், நிக்கோலஸ் பூரன் 16 சிக்ஸ், இஷான் கிஷன் 14 சிக்சர், ரோகித் சர்மா 14 சிக்சர், பொல்லார்டு 13 சிக்சர் அடித்து அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் இன்னும் ஏழு போட்டிகள் மீதமிருக்கிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் மைதானத்திற்கு செட் ஆகி இருப்பார்கள். சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டிருப்பார்கள். இரண்டாம் பாதியில் அதிரடியாக அதிக ரன்கள் குவிக்கப்பட்டு முற்றிலும் பேட்ஸ்மேன்கள் சார்ந்த போட்டியாகவே அமையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.