டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி கேப்டனாக படைதுள்ள சாதனைகளின் – பட்டியல் இதோ

Kohli-1
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக சமூகவலைதளத்தில் விராட் கோலி அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற அவர் ஐசிசி தரவரிசையில் 7வது இடத்தில் இருந்த இந்தியாவை அடுத்த 2 வருடங்களில் உலகின் நம்பர்-1 அணியாக மாற்றினார். அப்போது முதல் தற்போது வரை கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து விராட் கோலி தலைமையில் இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலித்து வருகிறது.

Kohli-1

- Advertisement -

வெளிநாடுகளில் வெற்றி:
சவால் மிகுந்த வெளிநாடுகளில் அவர் தலைமையில் இந்தியா பல சரித்திர வெற்றிகளை பெற்றது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்திய இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது “விராட் கோலியின் கேப்டன்ஷிப் மகுடத்தில் என்றும் ஜொலிக்கும் வைரமாகும்”. சரி இந்த தருணத்தில் விராட் கோலி தலைமையில் இந்தியாவின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளைப் பற்றி பார்ப்போம் வாங்க:

1. வெற்றிகரமான கேப்டன்:
இந்தியாவிற்காக 68 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள விராட் கோலி அதில் 40 வெற்றிகளை 58.82% என்ற வெற்றி விகிதத்தில் குவித்துள்ளார். அவர் தலைமையில் 17 போட்டிகளில் தோற்ற இந்தியா 11 போட்டிகளை டிரா செய்தது.இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான ஆசிய மற்றும் இந்திய கேப்டனாக விராட் கோலி சரித்திர சாதனை படைத்துள்ளார்.

kohli

2. ஆஸ்திரேலியாவில் சரித்திரம்: கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக 70 வருடங்களுக்கு பின் ஆஸ்திரேலியாவில் அவர் தலைமையில் டெஸ்ட் தொடரை இந்தியா 2 – 1 என வென்றது.இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய கேப்டன் என்ற சரித்திரத்துக்கும் அவர் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

- Advertisement -

3. சேனா நாயகன்: ஆசிய கண்டத்திற்கு வெளியே உள்ள சேனா நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் அதிக வெற்றிகளை குவித்த ஆசிய மற்றும் இந்திய கேப்டனாகவும் கோலி ஜொலிக்கிறார்.

kohli

சேனா நாடுகளில் அதிக வெற்றி பெற்ற ஆசிய கேப்டன்கள் இதோ:
விராட் கோலி : 7*
ஜாவேத் மியாண்டட் : 4
வாசிம் அக்ரம் : 4

- Advertisement -

4. இந்தியாவின் கிங் :
40 வெற்றிகளுடன் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான விளங்கும் விராட் கோலி தலைமையில் “இந்திய மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்றதே” கிடையாது.

kohli 1

5. ஆல் ஏரியா கிங் : டெஸ்ட் கிரிக்கெட்டில் வெவ்வேறு மைதானங்களில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலியை சேரும். அவர் தலைமையில் இந்தியா அதிகபட்சமாக 29 வெவ்வேறு மைதானங்களில் வெற்றிகளை பெற்றுள்ளது.

- Advertisement -

6. கனவு கேப்டன் : இத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐசிசியின் கனவு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த பெருமையையும் விராட் கோலியை சேரும். இவர் அதிகபட்சமாக 3 ஆண்டுகளில் அதுவும் தொடர்ச்சியான 3 ஆண்டுகளில் (2017, 2018, 2019) ஐசிசியின் கனவு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

kohli 1

கேப்டன் கோலி – தி பேட்டர்:
இந்தியாவின் ரன் மெஷினாக இருந்து வரும் விராட் கோலி கேப்டனாக ஏகப்பட்ட ரன்களை மழை பொழிந்துள்ளார். அதன் வாயிலாக அவர் படைத்த சாதனைகள் இதோ: 1. அதிக போட்டிகள் & ரன்கள்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 113 இன்னிங்ஸ்சில் 5864 ரன்களை 58.40 என்ற விகிதத்தில் குவித்துள்ள விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன் இந்தியாவுக்காக 68 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக போட்டிகளில் கேப்டனாக விளையாடிய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

kohli

2. அதிக சதங்கள் : அதேபோல் 20 சதங்களை விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக உள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

3. இரட்டை சதங்கள் : கேப்டனாக 7 இரட்டை சதங்கள் அடித்துள்ள விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். வரலாற்றில் மற்ற இந்திய கேப்டன்கள் அனைவரும் சேர்ந்து 6 இரட்டை சதங்கள் மட்டுமே அடித்துள்ளனர்.

Kohli-1

4. டாப் ஸ்கோர்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். சொல்லப்போனால் ஒரு இந்திய கேப்டனின் டாப் 3 அதிகபட்ச ஸ்கோர் விராட் கோலியின் பெயரில் (254*, 243, 235) உள்ளது.

இதையும் படிங்க : 7-வது இடத்தில் தவித்த இந்தியாவை நம்பர் ஒன்னாக மாற்றிய விராட் கோலி – இனி இப்படி ஒரு கேப்டன் கிடைப்பாரா?

இது போன்ற இன்னும் சில சாதனைகளை பட்டியலிடும் அளவிற்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ஆற்றிய பங்கு அளப்பரியதாகும். இத்தனை வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் இந்திய ரசிகர்களின் சார்பாக நன்றி ! விராட் கோலி.

Advertisement