இந்த வருட ஐ.பி.எல் தொடரில் தவறவிட இருக்கும் 5 முக்கிய நிகழ்வுகள் – லிஸ்ட் இதோ

Dubai

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் கோலாகலமாக இந்தியாவில் திருவிழாவைப் போல் நடைபெறும். ஆனால் இந்த வருடம் அப்படி திருவிழாவாக இருக்காது என்பது மட்டும் உண்மை கரோனா வைரஸ் இந்த அனைத்தையும் மாற்றி விட்டது. தற்போது துபாய் மைதானங்களில் இந்த ஐபிஎல் தொடர் நடக்கிறது. மேலும், ரசிகர்கள் இல்லாமல் இந்த ஒரு கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி மைதானத்தில் நடக்கும் இதன் காரணமாக ஒரு சில விஷயங்களை நாம் மிஸ் செய்யப்போகிறோம் முக்கியமான விஷயங்களை தற்போது பார்ப்போம்.

ipl

ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் :

ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐபிஎல் போட்டியிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருப்பார்கள். ஆனால் இந்த முறை வெளிநாட்டில் நடைபெறுவதாலும் கரோனா வைரஸ் காரணமாகவும் ஆடுகளத்தில் ஒரு ரசிகர் கூட இருக்க மாட்டார்.

உமிழ்நீர் பயன்படுத்த தடை :

கரோனா வைரஸ் காரணமாக வந்த விளைவு இது. உமிழ்நீரினால் தான் கரோனா வைரஸ் பரவுகிறது என்ற ஒரு கூற்று இருக்கிறது. இதன் காரணமாக இனி பந்தின் மீது உமிழ்நீர் நீர் தடவ கூடாது என்ற ஒரு விதி வந்துவிட்டது. அதனால் பந்துவீச்சாளர்கள் பந்தின் மீது எச்சிலை தடவக்கூடாது. இந்தவிதிமுறை பவுலர்களுக்கு பாதிப்பான ஒன்று என்பது நாம் அறிந்ததே.

- Advertisement -

கொண்டாட்டம் கிடையாது :

சமூக இடைவெளி விட்டு இந்த போட்டிகள் நடைபெறும் இதன் காரணமாக விக்கெட் விழுந்து விட்டாலோ ஒரு வீரர் சதமடித்து விட்டாலோ கொண்டாட்டத்தை பகிர்ந்துகொள்ள ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்ள கூடாது. கைகளை கொடுத்துக்கொள்ளக்கூடாது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு கிடையாது :

ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் முடிவில் ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின் முடிவில் அந்த குறிப்பிட்ட அணியின் ஒரு வீரர் வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி போட்டியை பற்றி விவரிப்பார். ஆனால் இந்த முறை அது கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ipll

போட்டி முடிந்து ஆட்டநாயகன் விழா கிடையாது :

வழக்கமாக ஒவ்வொரு போட்டி முடிந்ததும் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள், ஆட்ட நாயகன் என அனைவரையும் தனித்தனியே பேட்டி எடுப்பது வழக்கம். இந்த பேட்டிகள் கலகலப்பாகவும், ரசிக்கக் கூடிய வகையிலும் இருக்கும் ஆனால் இம்முறை எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.