ஐ.பி.எல் தொடர் உருவாதன் காரணம் மற்றும் வரலாறு பற்றி தெரியுமா ? – விவரம் இதோ

ipl

ஐபிஎல் தொடரில் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கால்பந்து, கூடைப்பந்து போன்ற போட்டிகளில் லீக் தொடரில் கடந்த பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் ரசிகர்களை சுவாரசியத்தை அதிகரிக்க டி20 கிரிக்கெட்க்கும் ஒரு தொடர் ஏற்பாடு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் கிரிக்கெட் உலகம் இருந்தது.

IPL

அந்த நேரத்தில்தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 20 ஓவர் போட்டிகள் வைத்து ஐபிஎல் தொடர் என்ற ஒரு புதிய லீக் தொடரை அறிமுகப்படுத்தியது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் மற்றும் என்பிஏ போன்ற கூடைப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகளில் லீக் தொடரை மையமாக வைத்துதான் இது உருவாக்கப்பட்டது.

உருவாக்கியதுடன் அந்த வருடம் 2007 ஆம் ஆண்டு இந்திய அணியின் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது . இதன் காரணமாக இந்திய ரசிகர்கள் டி20 போட்டிகளில் மீது மிகப்பெரிய அலாதியான ஆர்வத்தை கொண்டார்கள் இது உடனடியாக பற்றிக்கொள்ள ஐபிஎல் தொடர் சூடுபிடித்தது.

அனைத்துக்கும் பொதுவாக முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்றபோது கொல்கத்தா அணியின் துவக்க வீரர் பிரெண்டன் மக்கலம் ருத்ரதாண்டவம் ஆடி 158 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

ind fans 1

பின்னாளில் இந்த தொடர் சூடுபிடிக்கத் தொடங்கி ரசிகர்களின் பேராதரவோடு தற்போது வரை 12 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இப்படித்தான் ஐபிஎல் தற்போது வரை மக்களின் பேராதரவை பெற்று ஜொலித்துக் கொண்டிருக்கிறது.