இந்திய – ஆஸ்திரேலிய தொடருக்கான முழுப்போட்டி அட்டவணை வெளியீடு – அதிகாரபூர்வ போட்டி அட்டவணை இதோ

INDvsAUS

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்கிறது. நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த மொத்த அணியில் 31 பேர் இருக்கின்றனர்.

Ind

ஐபிஎல் தொடர் வரும் நவம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தனி விமானத்தின் மூலம் செல்ல உள்ளனர். விராட் கோலி தலைமையிலான மூன்று வகையான இந்திய அணி வீரர்களும் ஒட்டுமொத்தமாக நவம்பர் 12ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்று அடைகின்றனர்.

அதன் பின்னர் இவர்கள் அனைவரும் சிட்னி நகரில் உள்ள ஒரு தனி ஹோட்டலில் 14 நாட்களில் நாட்கள் தனிமைப் படுத்தப்பட உள்ளனர். அச்சமயத்தில் அந்த ஹோட்டலுக்கு அருகில் உள்ள மைதானத்தில் வீரர்கள் பயிற்சியிலும் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடருக்கான அதிகாரபூர்வ போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

schedule

அதில் உலகின் மிகப் பெரிய மைதானத்தில் நடைபெறும் பாரம்பரியமிக்க பாக்ஸிங் டெஸ்ட் போட்டியும் மெல்போர்ன் மைதானத்தில் நடக்க உள்ளது என்று அதில் குறிப்பிட்டு உறுதி செய்துள்ளனர்.

- Advertisement -

Pink-ball

மேலும் அந்த போட்டியில் ரசிகர்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு லட்சம் பேர் உட்காரக்கூடிய அந்த மைதானத்தில் தினமும் 25 ஆயிரம் ரசிகர்கள் மட்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 27ஆம் தேதி துவங்கும் இத்தொடர் ஜனவரி 19ஆம் தேதி முடிவடைவது குறிப்பிடத்தக்கது.