தோனிக்கு மட்டும் ஸ்பெஷல் ? நான் மட்டும் என்ன கொறச்சலா ? – சி.எஸ்கே நிர்வாகத்திடம் சண்டையிட்ட ரெய்னா

Raina-1
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சொந்தப் பிரச்சினைகள் காரணமாக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பியதாக சிஎஸ்கே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னா விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அது மட்டுமின்றி பதான்கோட்டில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்கள் ரெய்னாவின் அத்தையின் குடும்பத்தை தாக்கியதால் அவர் மாமா இருந்ததாலும் ரெய்னா இந்தியா திரும்பினார் என்றும் கூறப்பட்டது.

Raina-1

- Advertisement -

ஆனால் ரெய்னா இந்தியா திரும்பியது குறித்தும் சிஎஸ்கே அணியில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால் இதில் உள்ள மர்மம் அப்படியே இருந்தது. இந்நிலையில் “தி அவுட்லுக்” பத்திரிக்கை ஒன்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் ரெய்னாவுருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் இத்தொடரில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது. ரெய்னா 21ஆம் தேதி துபாயில் இறங்கியதில் இருந்து நிர்வாகத்துடன் பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

துபாயில் ரெய்னாவுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் அறையில் பால்கனி இல்லை என்று தெரிகிறது. மேலும் தோனிக்கு ஒதுக்கப்பட்ட வசதியான அறை போல தனக்கும் வேண்டும் என்று ரெய்னா நிர்வாகத்திடம் பிரச்சினையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. மேலும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளும் ரெய்னாவுக்கு பிடிக்கவில்லை. தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பால்கனி இல்லை என்பதை பிரதான பிரச்சினையாக ரெய்னா முன்வைத்துள்ளார். தோனியால் கூட ரெய்னாவை இந்த விஷயத்தில் சமாளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

Raina

இந்நிலையில்தான் சிஎஸ்கே அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனாஉறுதியானது. இதனை தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக அவர் உடனடியாக நாடு திரும்பியதாக அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில் : அந்த காலத்து நடிகையை போல சில கிரிக்கெட் வீரர்கள் நடந்துகொள்கிறார்கள். சிஎஸ்கே அணி என்பது ஒரு குடும்பம் போல மூத்த வீரர்கள் இளைஞர்களுடன் இணைந்து பழகிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

என்னைப்பொறுத்தவரை அணியில் நீங்கள் எங்களுடன் மகிழ்ச்சியாக இல்லையா திரும்பி சென்று விடுங்கள் நான் யாரையும் வற்புறுத்த மாட்டேன் என்று ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். சில நேரங்களில் வெற்றி உங்களின் தலைக்கு ஏறிவிடும். இது தொடர்பாக நான் தோனியிடமும் பேசினேன் அவர் இது போல இன்னும் எத்தனை பேர் அணியில் இருந்து வெளியேறினாலும் கவலை இல்லை என்று சொன்னார் என்று சீனிவாசன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் : சிஎஸ்கே அணியில் திடமான கேப்டன் இருக்கிறார்.

Raina

அதனால் ரெய்னா விலகியதால் எந்த பிரச்சினையும் கிடையாது. தோனியை வைத்து எங்களால் சிஎஸ்கே அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். ரெய்னாவிற்கு பதிலாக மற்றொரு திறமையான வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார். இறுதியாக இன்னும் ஐபிஎல் தொடர் தொடங்க வில்லை என்பதும் ரெய்னாவுக்கு தெரியும். இந்த ஆண்டு அவர் விளையாடவில்லை என்றால் அவரது சம்பள தொகையை(11 கோடி) அவர் இழப்பார் என்பதும் அவருக்கு நிச்சயம் தெரியும் என்று ஸ்ரீனிவாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement