யார் இந்த பிரியங்க் பன்சால்? ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடிக்க – என்ன காரணம்?

Panchal
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 26-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது துணை கேப்டனாக துவக்க வீரர் ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக மும்பையில் நடைபெற்ற பயிற்சியின் போது காயமடைந்த ரோகித் சர்மா இந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதன் காரணமாக ரோகித் சர்மாவிற்கு பதிலாக மாற்று வீரராக 31 வயதான குஜராத் வீரர் பிரியங்க் பன்சால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவிற்கு பதிலாக இந்திய அணியில் இவர் இடம்பிடிக்க என்ன காரணம் என்றும் அவர் யார் என்பது குறித்தும் தற்போது ரசிகர்கள் அதிக அளவில் தேடி வருகின்றனர்.

panchal 1

- Advertisement -

அதுகுறித்த பதிவை தான் நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி அண்மையில் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஏ அணியை தலைமைதாங்கி வழி நடத்தியவர் தான் இந்த பிரியங்க் பன்சால். அங்கு நடைபெற்ற தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அவர் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய அணியுடன் ஸ்டாண்ட் பை வீரராக சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல்தர கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7000 ரன்களை குவித்துள்ளார். இதில் 24 சதங்களும், 25 அரை சதங்களும் அடங்கும். மேலும் 2016 – 17 வது ரஞ்சி சீசனில் 1300 ரன்களை விளாசியுள்ளார். அதோடு அதிகபட்ச ரன்களாக 314 ரன்கள் அடித்துள்ளார். இப்படி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக முதல்தர கிரிக்கெட்டில் அசத்தி வந்த இவருக்கு தற்போது தான் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் அவர் இந்த தொடரில் அறிமுகமாவாரா என்று கேட்டால் அது சந்தேகம்தான். ஏனெனில் அணியில் ஏற்கனவே மாயங்க் அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் இருப்பதால் அவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் காயம் ஏற்பட்டால் மட்டுமே இவரால் விளையாட முடியும்.

panchal 2

அதுமட்டுமின்றி 2016 – 17 இல் குஜராத் அணியானது ரஞ்சி கோப்பையை முதன்முறையாக வென்ற போது அந்த அணியையும் அவர் தலைமை தாங்கி வழி நடத்தியிருந்தார். கடந்த 2018 – 19 ஆம் ஆண்டு உள்ளூர் தொடர் அதற்கடுத்து வந்த விஜய் ஹசாரே கோப்பை என அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது வரை மிகச்சிறப்பான பார்மில் இருக்கிறார். கடந்த ஆண்டு நியூசிலாந்து சென்ற இந்திய ஏ அணியில் இடம் பெற்றிருந்த இவர் அங்கும் சதம் அடித்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 12 வருஷத்துக்கு முன்னாடி விராட் கோலி பண்ண சம்பவத்தை இப்போ வச்சி செய்துள்ள – ருதுராஜ் கெய்க்வாட்

இப்படி தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்கள் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்து கொண்டிருந்த இவருக்கு தற்போது இந்திய அணியில் இடம் பெற ஒரு வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்தர கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் அனுபவம் மற்றும் 100 போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு மரியாதைக்காவது ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். இது குறித்த உங்கள் கருத்து என்ன?

Advertisement