12 வருஷத்துக்கு முன்னாடி விராட் கோலி பண்ண சம்பவத்தை இப்போ வச்சி செய்துள்ள – ருதுராஜ் கெய்க்வாட்

Ruturaj-1
Advertisement

சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது மகாராஷ்டிரா அணி கேப்டனாக தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் முதல் ஐந்து போட்டிகளில் 4 சதங்கள் விளாசி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார். இந்திய அணிக்காக கடந்த ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணத்தில் அறிமுகமான கெய்க்வாட்டிற்கு அதன் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

gaikwad

இருப்பினும் தொடர்ச்சியான தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் இவர் தற்போது நடைபெற்று வரும் இந்த விஜய் ஹசாரே டிராபியில் இதுவரை 4 சதங்களுடன் 500 ரன்களை கடந்து உள்ளார். இதன்காரணமாக நிச்சயம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விராட் கோலி 12 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த சாதனையை சமன் செய்துள்ளார். அதன்படி 2009-10 ஆம் ஆண்டு விராட் கோலி விஜய் ஹசாரே தொடரில் 4 சதங்களை அடித்து இருந்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு இதே சாதனையை ப்ரித்வி ஷா மற்றும் கர்நாடக துவக்க வீரர் படிக்கல் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Gaikwad-2

அதுமட்டுமின்றி அவர் அடித்த 2 சதங்கள் 150-க்கு மேற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ருதுராஜின் ஆட்டத்தை பார்த்து வியந்து நிற்கும் ரசிகர்கள் சென்னை அணிக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் இவர் முக்கிய வீரர் என்று தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement