தென்னாப்பிரிக்கா நாட்டில் இந்திய அணியின் லன்ச் என்ன? வீரர்கள் சாப்பிடும் உணவுகள் என்ன? – வைரலாகும் புகைப்படம்

Lunch
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாக்சிங் டே போட்டியாக துவங்கிய இந்த போட்டியின் முதல் நாளன்று டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை குவித்திருந்தது.

INDvsRSA

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் ஒரு பந்து கூட கூச்சப்படாமல் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்களுக்கு சற்று வருத்தம் ஏற்பட்டது. மேலும் இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் உள்ளதால் இந்த போட்டியில் என்ன நடக்கும்? என்பதில் இன்னும் ஆர்வம் நீடிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாம் நாள் மதியம் மழை விடாமல் பெய்தததால் போட்டி நடைபெறாமல் போனது. அப்போது தொலைக்காட்சியில் வெளியான ஒரு வீடியோவில் இந்திய அணியின் ஓய்வறைக்கு அருகே இந்திய அணிக்கான லஞ்ச் குறித்த தகவல் ஒரு பலகையில் எழுதப்பட்டு இருந்தது. அந்த புகைப்படமானது தற்போது இணையதளங்களில் படுவேகமாக வைரலாகி வருவது.

ஏனெனில் அந்த புகைப்படத்தில் தென்னாப்பிரிக்க நாட்டில் இந்திய அணி வீரர்கள் என்ன உணவினை உட்கொள்கிறார்கள் என்பது குறித்த பட்டியல் அதில் இடம்பெற்றுள்ளதால் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் லஞ்ச் என்னவெனில் :

இதையும் படிங்க : ஒருவேளை ரோஹித் சர்மா ஒருநாள் தொடரை தவறவிட்டால் இவர்தான் கேப்டனாம் – பி.சி.சி.ஐ போட்டுள்ள பிளான்

ப்ரோக்கோலி சூப், சிக்கன் செட்டிநாடு, வெஜிடபிள் கடாய், பன்னீர் டிக்கா போன்ற உணவுகள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதானால் இந்திய வீரர்கள் போட்டியின் இடையே என்ன உணவு உட்கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டிய ரசிகர்களுக்கு இந்த புகைப்படத்தின் மூலம் பதில் கிடைத்துள்ளது. மேலும் இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement