சென்னையின் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்..! யார் யார் தெரியுமா..?

CSk
- Advertisement -

தோனி தலைமையிலான சென்னை அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை நடந்து முடிந்த அணைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிலே ஆப் சுற்றிற்க்கு தகுதி பெற்ற ஒரே அணி என்றால் அது சென்னை அணி மட்டும் தான். இதுவரை 4 முறை இறுதி போட்டிக்கு நுழைந்துள்ள சென்னை அணி 2 முறை பட்டத்தை வென்றுள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றில்7 வது முறையாக இறுதிப்போட்டிற்கு தகுதி பெற்றது தோனி தலைமையிலான சென்னை அணி. ஐபிஎல் தொடரின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கம்பீரமாக இறுதி போட்டிக்கு நுழைந்து விட்டது. மேலும் இந்த ஆண்டு சென்னை அணி ஆடிய போது சென்னை அணி வயசான வீரர்களை கொண்ட அணி என்றும் அப்பாக்கள் விளையாடும் அணி என்றும் பலரும் கிண்டல் செய்தனர்.ஆனால் அது தான் சென்னை அணிக்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது.

அது என்ன அப்பாக்கள் விளையாடும் அணி என்று கேட்க்கிறீர்களா. தற்போதுள்ள சென்னை அணியில் தோனி, ஹர்பஜன், ரெய்னா உள்ளிட்ட அனைவருமே ஒரு குழந்தைக்கு அப்பாவாகத்தான் இருக்கின்றனர். இருப்பினும் கிரிக்கெட்டில் இவர்களது அனுபவம் என்பது மிக பெரியது,

மேலும் சென்னை அணி இந்த ஆண்டு வீரர்களை தேர்வு செய்த விதமும் மிகவும் அறிவுபூர்வமானது. அனுபவ வீரர்களான ஹர்பஜனை மும்பையிடம் இருந்து தன் பக்கம் இழுத்து அதே போல இதுவரை கோப்பையை வெல்லவில்லை என்று மற்ற அணியில் ஆடிவந்த ராயுடு, வாட்சன், தீபக் சாஹர் போன்றவர்களையும் அணியில் ஈர்த்தார்.

- Advertisement -
Advertisement