சென்னை அணி ஆல்-ரவுண்டர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் – யார் தெரியுமா

raina
- Advertisement -

உலகளவில் புகழ்பெற்ற இந்திய ஐபிஎல் டி20 போட்டிகள் கடந்த 2008 ஆண்டுமுதல் தொடங்கி பத்தாண்டுகள் நிறைவுசெய்து தற்போது பதினொராவது சீசனாக வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது.

mitchell

- Advertisement -

இரண்டு ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடை முடிந்தபின் மீண்டும் களமிறங்குகின்து சென்னை சூப்பர் கிங்ஸ். இது இன்னும் இந்த ஐபிஎல் மீதான ஈர்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.7ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கப்படவுள்ள ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான மிட்செல் சான்ட்னெர் திடீரென இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது இவருக்கு ஆட்டத்தின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

santner

பின்னர் மருத்துவ பரிசோதனையில் கால் முட்டியில் எலும்பில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதிகஅளவு காயம் ஏற்பட்டிருப்பதால் ஆபரேஷன் செய்வதே ஒரே வழி என்று டாக்டர்கள் கூறியதையடுத்து ஆபரேசன் செய்துகொள்ள சம்மதித்துள்ளார்.இதனால் இந்த ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகவேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்.

Advertisement