திடீரென குட் பை சொன்ன விராட் கோலி! அடுத்த டெஸ்ட் கேப்டனாக தகுதியான – 4 வீரர்கள் இதோ

Kohli
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி திடீரென நேற்று முன்தினம் தனது பதவி விலகலை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 2014ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற போது 7வது இடத்தில் தத்தளித்த இந்தியாவை அதன் பின் தனது சிறப்பான கேப்டன்ஷிப் காரணமாக தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் அணியாக மாற்றிய பெருமை அவரை சேரும். அத்துடன் சௌரவ் கங்குலி எம்எஸ் தோனி என பல ஜாம்பவான் இந்திய கேப்டன்களைவிட விராட் கோலி தலைமையில் வெளி நாடுகளில் இந்தியா ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளை குவித்தது.

kohli

- Advertisement -

அடுத்த கேப்டன் யார்:
இன்னும் சொல்லப்போனால் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு நிகர் தற்போது உலகில் யாருமே இல்லை என்றே கூறலாம். இப்படி வெற்றிநடை போட்டு வந்த இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து திடீரென விராட் கோலி விலகியுள்ளது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை பின்னடைவிற்கு தள்ளியுள்ளது.

இந்த வேளையில் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலி அளவுக்கு இல்லை என்றாலும் அந்த பதவியை வகிக்க தகுதியான 4 வீரர்கள் பற்றி பார்ப்போம்:

Rohith

1. ரோஹித் சர்மா : தற்போதைய நிலைமையில் ரோகித் சர்மாவை தவிர இந்திய டெஸ்ட் அணிக்கு தலைவராகும் முழு தகுதி வேறு யாருக்கும் கிடையாது என்று கூறலாம். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியை ஏற்றுள்ள இவர் சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான துணை கேப்டனாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

தற்போது 34 வயதை நிரம்பியுள்ள இவருக்கு டெஸ்ட் அணியை நிர்வகிக்கும் அனுபவம் உள்ளது. இருப்பினும் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் இவர் ஒருநாள், டி20 ஆகிய 2 கிரிக்கெட்டையும் சேர்த்து 3வதாக டெஸ்ட் கிரிக்கெட்டையும் நிர்வகிக்க முடியுமா என்பதே ஒரு கேள்வியாகும். ஏனென்றால் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் செய்யும்போது அதிகப்படியான பணிச்சுமையை ஏற்பட்டு அது பேட்டிங்கில் பிரச்சனையை ஏற்படுத்த வல்லது.

Rahul-1

2. கேஎல் ராகுல் : தற்போதைய நிலைமையை தவிர்த்து வருங்காலத்தை கருத்தில் கொண்டால் கேஎல் ராகுலை கேப்டனாக நியமிக்கலாம், ஏனெனில் ரோகித் சர்மாவுக்கு ஏற்கனவே 34 வயது ஆகிவிட்டது.

- Advertisement -

இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்டதுடன் தற்போது இந்திய வெள்ளை பந்து அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக நியமித்தால் ஆரம்ப காலத்தில் இந்தியாவிற்கு முழு வெற்றி கிடைக்காது என்றாலும் நாட்கள் செல்லச்செல்ல வெற்றியில் முன்னேற்றம் கிடைக்கும் என நம்பலாம்.

pant 2

3. ரிஷப் பண்ட் :

- Advertisement -

தற்போதைய நிலையை கருத்தில் கொள்ளாமல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டனை நியமிக்க வேண்டும் என்ற கண்ணோட்டதுடன் பார்த்தால் அதற்கு ராகுல் போல ரிஷப் பண்ட் தகுதியானவர். வெறும் 24 வயது மட்டுமே நிரம்பிய உள்ள இவரின் பேட்டிங் திறமை பற்றி சொல்லத்தேவையில்லை.

கேப்டன்ஷிப் அனுபவம் என்று பார்த்தால் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக கேப்டன்ஷிப் செய்தவர். 2007இல் தோனியை கேப்டனாக நியமித்தது போல் தற்போது இவர் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை கொடுத்து பார்க்க பிசிசிஐ முடிவு எடுத்தால் அதில் தவறு எதுவும் இல்லை. மேலும் முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூட இவரை கேப்டனாக நியமிக்கலாம் என ஆதரவு தெரிவித்துள்ளார்.

Ashwin

4. ரவிச்சந்திரன் அஷ்வின் : இதற்கு சாத்தியம் குறைவு என்றாலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தகுதி உள்ளது என்பதே உண்மை. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக வலம் வரும் இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக கேப்டன்ஷிப் செய்தவர், அத்துடன் ரஞ்சி கோப்பையில் இதற்கு முன் தமிழக அணிக்காக கேப்டன்ஷிப் செய்த அனுபவம் கொண்டவர்.

இதையும் படிங்க : உங்க பின்னால் வரவங்களுக்கு பெரிய தலைவலியை குடுத்துட்டீங்க – கோலியின் விலகல் குறித்து மனம்திறந்த அஷ்வின்

மேலும் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டன்ஷிப் செய்தால் ரோகித் சர்மாவின் பணிச் சுமை அதிகமாகும், அனுபவமில்லாத கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் வசம் திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியை வழங்க வேண்டாம் என பிசிசிஐ நினைத்தால் தற்போதைய நிலைமைக்கு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த ரவிச்சந்திரன் அஷ்வின் தகுதியானவராக காணப்படுகிறார்.

Advertisement