டி20 போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் வழங்கிய பவுலர்கள். டாப் 5 பவுலர்கள் – முழு லிஸ்ட் இதோ

T20
- Advertisement -

டி20 போட்டிகள் ட்ரென்ட் ஆனபிறகு பந்துவீச்சாளர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. அந்த காலத்தில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்கள் எல்லாம் டெஸ்ட் போட்டிகளில் வீசிய வரலாறு உண்டு. ஆனால் டி20 போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளர் 4 ஓவர்கள் மட்டுமே தரமுடியும். வெறும் 24 பந்துகளில் எத்தனை ரன்கள் கொடுத்து விட முடியும் என்று யோசிப்போம். ஆனால் அப்படி அதிக ரன்கள் கொடுத்து உள்ள வீரர்களை தற்போது பார்ப்போம்.

- Advertisement -

ஸ்டூவர்ட் பிராட் – 36 ரன்கள் :

இந்த சம்பவத்தை பற்றி உலகமே அறியும்.2007 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் போது எதிரணி வீரர்கள் கோபப்படுத்தி விட்டார்கள் என்று பந்துவீசிய ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசினார் இந்தியாவின் யுவராஜ் சிங். தற்போது வரை ஒரே ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுதான்.

Dube

சிவம் துபே – 34 ரன்கள் :

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இந்திய அணியில் களம் இறக்கி விடப்பட்டார். பந்துவீச்சு பெரிதாக இருக்காது அதன் காரணமாக இவரது பந்துவீச்சு நியூசிலாந்து வீரர்கள் ராஸ் டெய்லர் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஆகியோர் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டனர். 6, 6, 4, 1, 4nb, 6, 6 என பிரித்து மேய்ந்து விட்டனர்.

வெய்ன் பார்னல் – 32 ரன்கள் :

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர். இவர் ஆல்-ரவுண்டராக வலம் வந்தார் அவரது பந்து வீச்சில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்டிலர் 6, 6, 2, 1 no ball, 4 no ball, 4, 6, 2 என 32 ரன்கள் விளாசி இருந்தார்.

இசத்துல்லா டவ்லட்ஸாய் – 32 ரன்கள் :

- Advertisement -

இவர் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது இவரது 4 ஓவரில் மட்டும் 56 ரன்கள் விளாச பட்டது. அதில் ஒரு ஓவரில் 32 ரன்களும் அடக்கம்.

Binny

ஸ்டூவர்ட் பின்னி – 32 ரன்கள் :

வெஸ்ட் இண்டீஸ் எதிராக நடைபெற்ற போட்டியின்போது ஒரே ஓவரில் 32 ரன்கள் இவர் வாரி வழங்கி இருந்தார். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் எல்வின் லெகிஸ் இவரது பந்தை 5 தொடர்ந்து சிக்சர்கள் விளாசி இருந்தார்.

Advertisement