கடந்த 25 ஆண்டு கிரிக்கெட்டில் சாதித்தவர்களை வைத்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஒருநாள் லெவன் அணி – வீரர்களின் பட்டியல் இதோ

- Advertisement -

147 வருட கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 30 முதல் 40 வருடங்களாக தான் கிரிக்கெட் அதிவேகமாக வளர்ந்து இருக்கிறது. அதிலும் கடந்த 25 வருடங்களில் பல ஆயிரம் கோடிகள் புழங்கும் அளவிற்கு கிரிக்கெட் வளர்ந்திருக்கிறது. இப்படி அந்த கிரிக்கெட்டை மாற்றிய கடந்த 25 வருடத்தின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணியை தற்போது பார்ப்போம்.

Sachin 1

- Advertisement -

இந்த அணியின் துவக்க வீரராக ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இடம்பெறுகின்றனர். ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர் சச்சின் டெண்டுல்கர் ஒரு புறமும் இடது கை பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் ஒருபுறமும் இருந்தால் பட்டையைக் கிளப்பலாம்.

மூன்றாவது இடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா இடம்பெறுகிறார். நான்காவது இடத்தில் இந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த வீரரான விராட் கோலி வருகிறார். ஐந்தாவது இடத்தில் இந்த காலத்தில் அதிரடி வீரர் மிஸ்டர் 36 0 டிகிரி ஏபிடி வில்லியர்ஸ் வருகிறார். இவர் அடித்த அனைத்து சதங்களுமே 100 ஸ்ட்ரைக் ரேட்க்கு மேலாக தான் இருக்கிறது என்பது தனிச்சிறப்பு.

Kallis

ஆல்-ரவுண்டராக தென்ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் பட்டையைக் கிளப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கிரிக்கெட்டின் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட கூடிய முழுமையான வீரராக இவர் பார்க்கப்படுகிறார். கீப்பராக கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த கீப்பர் மகேந்திர சிங் தோனியை கண்டிப்பாக இறக்கலாம். மேலும் அவரே கேப்டன் இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் மற்றும் கிளன் மெக்ராத் ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடிக்கின்றனர். இதுவே கடந்த 25 ஆண்டுகளில் மிகச்சிறந்த ஒருநாள் அணியாக தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

muralitharan

முழுமையான அணி இதோ : ஆடம் கில்கிறிஸ்ட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, பிரையன் லாரா, ஏபி டிவில்லியர்ஸ், காலிஸ், எம்எஸ் தோனி, வாசிம் அக்ரம், கிளன் மெக்ராத், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன்.

Advertisement