ரோஹித்தின் 264 அதிகபட்ச ரன்களை முயறியடிக்க வாய்ப்புள்ள 5 பேட்ஸ்மேன்கள் – முழு லிஸ்ட் இதோ

Rohith
- Advertisement -

ரோஹித் சர்மா கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்து இருந்தார். இதுதான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக குவிக்கப்பட்ட தனிப்பட்ட சாதனையாகும். இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள கிரிக்கெட் வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்.

மார்ட்டின் கப்டில் :

- Advertisement -

இவர் நியூசிலாந்தின் துவக்க வீரர் என்பதால் இவருக்கு வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே 16 சதங்கள் அடித்து விட்டார் .உலக கோப்பை தொடரில் கூட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 237 ரன்கள் விளாசி இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

Finch

ஆரோன் பின்ச் :

- Advertisement -

இவர் வலதுகை துவக்க வீரர் ஆவார். ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர். டி20 போட்டிகளில் 3 முறை 150 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளார். இப்படிப்பட்ட இந்த வீரரால் கண்டிப்பாக ரோகித் ஷர்மாவின் சாதனையை முறியடிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

குவின்டன் டி காக் :

- Advertisement -

இவர் தென் ஆபிரிக்காவின் இடதுகை ஆட்டக்காரர் . இவரும் துவக்க வீரர் தான் .ஒருநாள் போட்டிகளில் மட்டும் தென்னாப்பிரிக்கா அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்கி ஆடி வருகிறார். இவருக்கு 27 வயதுதான் ஆகிறது. ஏற்கனவே 15 சதங்கள் அடித்து விட்டார். ஒருநாள் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன் 178 ஆகும். இன்னும் ஐந்து வருடத்திற்கு உள்ளாக அந்த சாதனையை முறியடிக்க இவருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஜேசன் ராய் :

- Advertisement -

இவர் இங்கிலாந்தின் அதிரடி துவக்க வீரர் ஆவார். இவரின் அதிகபட்ச ரன் 171 ஆகும். ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக ஆடுவதில் வல்லவர் 50 ஓவர்கள் களத்தில் நின்று விட்டால் இவர் கண்டிப்பாக அந்த சாதனையை முறியடித்து விடுவார்.

warner

டேவிட் வார்னர் :

ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக ஆடி கொண்டிருப்பவர் .இவரது அதிகபட்ச ரன் 178. ஆகும். அந்த போட்டியில் 10 ஓவர்கள் இருக்கும் போதே தனது ஆட்டத்தை இழந்துவிட்டார் எதிர்காலத்தில் 50 ஓவர்கள் இவர் களத்தில் நின்று ஆடினால் அந்த சாதனையை முறியடிக்க பட வாய்ப்புகள் அதிகம்

Advertisement