பாதி ஐ.பி.எல் தொடரில் வீரரை மாற்றிகொள்ளும் முறை மற்றும் அதன் பயன் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

ipl-bowlers
- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு வருடமாக மிட் சீசன் டிரான்ஸ்பர் என்ற ஒரு வசதி இருக்கிறது. அதாவது ஐபிஎல் தொடரின் பாதி போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ஒவ்வொரு அணியும் தனது வீரர்களை மற்ற அணிகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு அணியும் 7 ஆட்டங்களில் விளையாடி முடிந்திருக்கும் நிலையில் இந்த வசதி நடைமுறைக்கு வரும்.

srh 1

- Advertisement -

அப்போது ஆடும் லெவனில் இடம் பிடிக்க முடியாமல் வெளியில் உட்கார்ந்திருக்கும் வீரர்கள் ஒரு அணியிலிருந்து மற்ற அணிக்கு மாறிக்கொள்ளலாம். இப்படிப்பட்ட வீரர்கள் அந்த அணியில் குறைந்தது இரண்டு போட்டிகள் அல்லது அதற்கும் குறைவாக விளையாடி இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தொடரின் பாதியில் ஒப்பந்தம் போடப்பட்டு இரண்டு அணிகள் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக்கொள்ளலாம்.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் 13 வீரர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 9 வீரர்களும் உள்ளனர். டெல்லி அணியில் அஜின்கியா ரஹானே, அலெக்ஸ் கேரி, கீமோ பால் உள்ளிட்ட 11 பேர் இருக்கின்றனர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 பேரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 10 பேரும்இருக்கின்றனர்.

Rahane

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 12 பேரும், பெங்களூர் அணியில் 10 பேரும் இந்த டிரான்ஸ்பர் வாய்ப்பிற்காக பயன்படுத்தப்படும் நிலையில் இருக்கின்றனர். சென்னை அணி குறிப்பாக ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேடிக்கொண்டிருக்கிறது. அதற்காக அஜின்கியா ரஹானே சென்னை அணிக்கு தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Advertisement