புதிய கிரிக்கெட் தொடரின் கோப்பைக்கு கிறிஸ் கெயிலின் பெயர் – ரசிகர்கள் வியக்கும் முழுவிவரம்

Gayle
- Advertisement -

நூற்றாண்டுகளுக்கு முன்பாக எண்ணற்ற நாட்களைக் கொண்ட போட்டிகளாக தொடங்கப்பட்ட கிரிக்கெட் நாளடைவில் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளாக வடிவம் பெற்று கடந்த பல வருடங்களாக விளையாடப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் முடிவை கொடுக்காமல் டிராவில் முடிந்ததால் அதன்பின் 60 ஓவர் கொண்ட போட்டியாக தொடங்கப்பட்டு 50 ஓவர் போட்டிகளாக மாற்றப்பட்ட ஒருநாள் போட்டிகள் 90களில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் கிரிக்கெட்டாக அவதரித்தது.

அதுவும் ஒரு கட்டத்தில் அழுத்து போனதாக உணர்ந்த காரணத்தால் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்த கடந்த 2005இல் துவங்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள் எதிர்பாராத அளவுக்கு ஓவருக்கு ஓவர் திரில்லர் தருணங்களை விருந்தாக படைத்து இன்று ரசிகர்கள் விரும்பி பார்க்கும் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் போட்டியாக உருவெடுத்துள்ளது.

- Advertisement -

ஆரம்பத்தில் சர்வதேச அளவில் மட்டும் நடைபெற்ற அந்த போட்டிகளை பார்த்து ஐபிஎல், பிக் பேஷ், பிஎஸ்எல் என ஒவ்வொரு நாட்டிலும் தொடங்கப்பட்ட டி20 தொடர்கள் தற்போதெல்லாம் ஒவ்வொரு வருடமும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. 3 – 4 மணி நேரங்களில் முடிவைக் கொடுக்கும் அந்த போட்டிகளுக்கு அடுத்ததாக 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரட் தொடர், 10 ஓவர்களை கொண்ட டி10 தொடர்கள் துவங்கப்பட்ட கிரிக்கெட்டை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் செல்ல காத்திருக்கின்றன.

சிக்ஸ்ட்டி தொடர்:
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட அத்தனை கிரிக்கெட் தொடர்களிலும் புதுமை காணும் வகையில் சிக்ஸ்ட்டி என்ற பெயரில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் புதிதாக ஒரு கிரிக்கெட் தொடரை கடந்த வாரம் அறிவித்துள்ளது. அதாவது 10 ஓவர்கள் கொண்ட தொடராக நடக்கப் போகும் இந்த தொடரில் வித்தியாசத்தை பொருத்துவதற்காக ஏற்கனவே உள்ள விதிமுறைகளுக்கு பதிலாக வித்தியாசமான புதுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று வெஸ்ட் இண்டீசில் வழக்கம்போல கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக ஆகஸ்ட் 24 – 28 ஆகிய தேதிகளில் செயின்ட் கிட்ஸ் நகரில் இந்த தொடர் நடைபெறும் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ஆடவர் மற்றும் மகளிர் என தனித்தனியாக நடைபெறும் இந்த தொடரில் 6 ஆடவர் அணிகளும் 3 மகளிர் அணிகளும் விளையாட உள்ளனர். இந்த தொடருக்கான விதிமுறைகள் இதோ:

  1. ஒவ்வொரு அணியின் பேட்டிங்கில் 10 விக்கெட்டுக்கு பதில் 6 விக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  2. 10 ஓவர்களில் முதல் 2 ஓவர்கள் பவர்பிளே ஓவர்களாக இருக்கும்.
  3. அந்த பவர்பிளே ஓவர்களில் அதாவது முதல் 12 பந்துகளில் குறைந்தது 2 சிக்சர்கள் அடித்தால் 3-வது பவர்பிளே பூட்டு திறக்கப்பட்டு எக்ஸ்ட்ராவாக ஒரு பவர்பிளே ஓவர் கொடுக்கப்படும்.
  4. அதேபோல் ஒரு பவுலர் 2 ஓவர்களுக்கு மேல் பந்துவீச அனுமதிக்கப்படமாட்டாது.
  5. பந்து வீசும் அணி ஒவ்வொரு ஓவருக்கும் பெவிலியன் எண்டை மாற்றாமல் 5 அவர்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம்.
  6. 45 நிமிடத்திற்குள் பந்துவீசும் அணி 60 பந்துகளை முடிக்காவிட்டால் எஞ்சிய நிமிடங்களில் வீசும் ஓவர்களுக்கு உள் வட்டத்துக்கு வெளியே அனுமதிக்கப்படும் பீல்டர்களில் ஒருவர் குறைத்துக் கொள்ளப்படுவார்கள்.
  7. போட்டியின் எந்த தருணத்திலும் கிடைக்கக்கூடிய பிரீ ஹிட்டை எப்போது கொடுக்கலாம் என்பதை ரசிகர்கள் அதற்கான மொபைல் ஆப் அல்லது இணையம் வாயிலாக தேர்வு செய்வார்கள்.

கிறிஸ் கெயில் பெயர்:
இந்த நிலைமையில் இந்த தொடரை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் இத்தொடரின் வெற்றியாளருக்கு பரிசளிக்கப்படும் வெற்றி கோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் பெயரை அந்நாட்டு வாரியம் சூட்டியுள்ளது. டி20 போட்டிகள் தொடங்கப்பட்டது முதல் தனது சூறாவளியான ஆட்டத்தால் அதிரடியான சிக்சர்களை பறக்க விட்டு ரன் மழை பொழிந்து அதிக ரன்கள், அதிக ரசிகர்கள், அதிக சதங்கள் என ஏராளமான சாதனைகளை படைத்துள்ள கிறிஸ் கெயிலை ரசிகர்களும் ஜாம்பவான்களும் “யுனிவர்சல் பாஸ்” என்ற பட்டப் பெயருடன் அழைக்கிறார்கள்.

- Advertisement -

எனவே “யுனிவர்சல் பாஸ் கோப்பை” என்ற அவரின் பட்டப்பெயர் இந்த தொடரின் வெற்றி கோப்பைக்கு சூட்டப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று போற்றப்படும் அவரை இந்த தொடரை பிரபலப்படுத்துவதற்காக பிராண்ட் அம்பாசிடராக அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதுபற்றி கிறிஸ் கெயில் மகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு. “யுனிவர்சல் பாஸ் என்ற பெயர் வெற்றிக் கோப்பைக்கு சூட்டப்பட்டுள்ளது மிகச்சிறந்த உணர்வாக உள்ளது. இதில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது உண்மையா என்று அனைவரும் கேட்கலாம்”

“ஆம் இது உண்மைதான், இதற்காக மகிழ்ச்சியடையும் நான் இதில் பங்கேற்பதை எதிர்பார்த்து காத்துள்ளேன். சிக்ஸ்டி எனப்படும் இந்த தொடரில் என்னென்ன புதுமைகள் வரப்போகிறது என்பதை விளையாடி பார்க்க போகிறேன். மேலும் முதல் 2 ஓவர்களில் 2 சிக்சர்களை அடித்து அந்த ரகசியமான பிரீ ஹிட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : மறைந்த ஜாம்பவான் ஷேன் வார்னேவின் மிகப்பெரிய சாதனையை சமன்செய்த நாதன் லயன் – விவரம் இதோ

இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்த வருட கரீபியன் லீக் தொடரில் கிறிஸ் கெயில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement