- Advertisement -
உலக கிரிக்கெட்

23 ரன்களில் 73 வருட சாதனையை தகர்த்த ஸ்மித் – விவரம் இதோ

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பெயின் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வரும் தொடக்க வீரராக வார்னர் மற்றும் பர்ன்ஸ் களம் இறங்கினார்கள். 4 ரன்கள் எடுத்திருந்தபோது பர்ன்ஸ் ஆட்டம் இழந்தார். அதன்பிறகு அவருடன் இணைந்த லபுசாக்னே சிறப்பாக ஆடினார். இவர்கள் இருவரது நிதானமான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 304 ரன்களை குவித்து இருந்தது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 589 ரன்களை எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது வார்னர் ஆட்டமிழக்காமல் 335 ரன்களை குவித்து சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. இன்னும் ஆஸ்திரேலிய அணியை விட பாகிஸ்தான் அணி 493 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதால் இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணியின் வீரரான ஸ்மித் 23 ரன்களை கடந்தபோது டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதுவரை 126 இன்னிங்சில் விளையாடியுள்ள ஸ்மித் 7000 ரன்களை இந்தப்போட்டியில் கடந்தார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர் வால்டர் ஹமன்ட் 131 இன்னிங்சில் 7000 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது அதுவும் இந்த சாதனை 73 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அதனை தற்போது ஸ்மித் முறியடித்துள்ளார்.

- Advertisement -
Published by