டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் அறிவிப்பு – இந்தியா எவ்வளவு புள்ளிகள் தெரியுமா ?

team-india

2019 ஆம் வருடத்திலிருந்து டெஸ்ட் தொடருக்கான சாம்பியன்ஷிப் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி அதற்கேற்ப புள்ளிகள் கொடுக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடத்தப்படும்.

india

இதில் வெற்றி பெறும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன் கோப்பை கொடுக்கப்படும். இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கிய முதல் இந்திய அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது வரை ஒரு போட்டிகளில் கூட தோற்காமல் 360 புள்ளிகள் பெற்று அபாரமாக முதலிடத்தில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளிலும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இத்தனை 360 புள்ளிகளை குவித்துள்ளது.

india

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 120 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது . ஆனால் இந்திய அணிக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள அணிகளுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இதனை பார்த்தால் இந்திய அணி எப்படியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும் என்று இப்போதே நம்மால் கணிக்க முடிகிறது.

- Advertisement -