உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான புள்ளிகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன தெரியுமா – விவரம் இதோ

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆஷஸ் தொடருடன் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கியது. இந்தத் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. அதற்கு அடுத்து தற்போது இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூஸிலாந்து-இலங்கை ஆகிய அணிகள் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

IND

அதில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து 60 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றி, தோல்வி மற்றும் ஒரு ட்ரா என 32 புள்ளிகளில் உள்ளது. தற்போது வெளியிடப்பட்ட புள்ளி பட்டியலைப் பார்த்து பல கிரிக்கெட் ரசிகர்கள் எவ்வாறு புள்ளி பட்டியல் போடப்பட்டுள்ளது என்று குழம்பியுள்ளனர். அந்த குழப்பத்தை தெளிவுபடுத்தும் விதமே இந்தப்பதிவினை உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியல் விதிமுறைப்படி ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் அளிக்கப்படும். ஒரு தொடரில் இரு அணிகளுக்கிடையே எத்தனை போட்டிகள் நடைபெறுகிறதோ அதனைக்கொண்டு சராசரியாக புள்ளிகள் பிரிக்கப்படும். அதாவது தற்போது இந்தியா இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. எனவே இந்த தொடரில் 120 புள்ளிகள் சமமாக இரண்டு போட்டிகளுக்கும் 60 என்று கொடுக்கப்படும். போட்டியில் வெற்றி பெற்றால் 60 புள்ளிகளும், டிரா செய்தால் மூன்றில் ஒரு பங்கு புள்ளிகளாக 20 புள்ளிகள் வழங்கப்படும்.

test

எனவேதான் ஒரு வெற்றியுடன் இந்தியா 60 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் ஒவ்வொரு போட்டிகளுக்கும் 24 புள்ளிகள் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெற்றால் 24 புள்ளிகளும், போட்டியில் டிரா ஆகினால் மூன்றில் ஒரு பங்காக 8 புள்ளிகளும் கிடைக்கும். இதன்படி ஒரு வெற்றி, ஒரு டிரா என இரு அணிகளும் 32 புள்ளிகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement