முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மும்பையை சேர்ந்தவர் என்று நம் அனைவர்க்கும் தெரியும். சில ஆண்டுகள் மும்பை அணியில் விளையாடி வந்த சச்சின் தற்போது அந்த அணியின் தூதுவராகவும் இருந்து வருகிறார். இதனால் மும்பையில் நடக்கும் எந்த போட்டியையும் சச்சின் தவறாமல் மைதானத்தில் நேரில் சென்று பார்ப்பார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் வில்லையம்சன் 47 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 117 ரன்களை குவித்து சென்னை அணியை வெற்றி பெற செய்தார்.
இந்த போட்டி சச்சினின் சொந்த மண்ணான மும்பையில் நடந்தது, பெரும்பாலும் மும்பையில் நடக்கும் எந்த போட்டி என்றாலும் சச்சின் கண்டிப்பாக நேரில் கலந்து கொண்டு கண்டுகளிப்பார். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதி போட்டி மும்பையில் நடந்தும், இந்த போட்டியை நேரில் காண சச்சின் செல்லவில்லை.
The IPL ended on a high note … a great final between CSK vs SRH. Watching it with @mangeshkarlata Didi ???? at her place made it even more special. pic.twitter.com/5WkO24vilx
— Sachin Tendulkar (@sachin_rt) May 28, 2018
இந்த இறுதி போட்டியில் மும்பை அணி விளையடததால் தான் சச்சின் இந்த போட்டியை காண வரவில்லை என்று பலரும் கூறிவந்தனர். ஆனால் இதற்கான காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சச்சின் “சென்னை மற்றும் ஹைதராபாத் அணி மோதும் இந்த மகத்தான இறுதி போட்டியை நான் லதா மங்கேஸ்வரனுடன் வீட்டில் கண்டுகளித்தது ,மேலும் சிறப்பாக அமைந்தது” என்று கூறியுள்ளார்.