தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற வேளையில் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்திய அணியை இப்படி வீழ்த்தியது மகிழ்ச்சி : தெம்பா பவுமா
இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
எளிதில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்த போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது குறித்து பேசியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறுகையில் :
உண்மையிலேயே இந்த போட்டி மிகவும் சுவாரசியமாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மைதானத்தில் இருந்த தன்மையை கருத்தில் கொண்டே நாங்கள் பேட்டிங்கில் விளையாடியிருந்தோம். அதேபோன்று இந்த மைதானத்தில் நிச்சயம் எங்களது முழு உழைப்பையும் அளித்தால் முடிவு சரியாக கிடைக்கும் என்று நினைத்தோம்.
இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. ரன் குவிப்பும் மிகவும் சவாலாக இருந்தது. பந்துவீச்சில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு எங்களை போட்டிக்குள் கொண்டு வந்தனர். இந்த போட்டியில் 120 முதல் 125 ரன்கள் என்ற இலக்கினை நிர்ணயித்தால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையோடு தான் விளையாடினோம்.
இதையும் படிங்க : இலக்கு குறைவாக இருந்தும் நாங்கள் தோல்வியை சந்திக்க இதுவே காரணம் – ரிஷப் பண்ட் வருத்தம்
அந்த வகையிலே நானும் கார்பின் போஷும் இரண்டாவது இன்னிங்சின் போது சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தோம். இறுதியில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.



