IND vs RSA : பிட்ச் இப்படி பண்ணும்னு நான் நெனைச்சிக்கூட பாக்கல – தோல்வி குறித்து பவுமா வருத்தம்

Bavuma
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று செப்டம்பர் 28-ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் துவங்கியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவிச்சை தீர்மானம் செய்யவே தென்னாபிரிக்க அணியானது பேட்டிங் செய்ய களம் இறங்கியது.

INDvsRSA-Toss

- Advertisement -

அப்படி களமிறங்கியதுமே இந்திய அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த 2.3 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களால் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியாத வேளையில் இறுதியில் தென்னாப்பிரிக்க அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக மகாராஜ் 41 ரன்கள் அடித்தார்.

பின்னர் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இந்திய அணியானது துவக்கத்திலேயே ரோஹித் மற்றும் கோலி ஆகியோரது விக்கெட்டை இழந்தாலும் துவக்க வீரர் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரது அற்புதமான ஆட்டத்தின் காரணமாக 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ரன்கள் குவித்து 8 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராகுல் 51 ரன்களுடனும், சூரியகுமார் யாதவ் 50 ரன்களுடன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

KL Rahul Suryakumar Yadav IND vs RSA

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் சொதப்பி விட்டோம். சூழ்நிலைக்கு ஏற்ப இந்த மைதானத்தில் எங்களால் பேட்டிங் செய்ய முடியவில்லை. அதேபோன்று மைதானத்தில் இந்த அளவு ஸ்விங் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

- Advertisement -

எங்கள் நினைப்பிருக்கும் மாறாக அனைத்தும் நடந்து விட்டது. பொதுவாக உலகின் எந்த ஒரு மைதானமாக இருந்தாலும் பந்தினை லைன் பிடித்து அடிக்கலாம். ஆனால் இந்த மைதானத்தில் இருந்த ஸ்விங் காரணமாக துவக்கத்தில் பல விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டோம். இருந்தாலும் எங்களது பின்வரிசை ஆட்டக்காரர்கள் ஓரளவு டீசன்டான ஸ்கோர்க்கு அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : IND vs SA : ஷிகர் தவானின் வரலாற்று சாதனையை தகர்த்து புதிய உலகசாதனை படைத்த சூர்யகுமார் – பட்டியல் இதோ

அதோடு எங்களது அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். அதோடு சுழற்பந்து வீச்சாளர்களும் நன்றாக பந்து வீசினார்கள். பவுலிங் மட்டுமே இந்த போட்டியில் எங்களுக்கு பாசிட்டிவாக அமைந்தது என தெம்பா பவுமா தோல்வி குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement