தோனி மற்றும் கெயில் போன்று பவர் இல்லையென்றாலும் சொன்னதை செய்துகாட்டிய – தெ.ஆ வீரர் மகிழ்ச்சி

Bavuma-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி பெங்களூரு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தவான் 36 ரன்கள் குவித்தார் மற்றபடி இந்திய அணி வீரர்கள் ஒருவர்கூட 20 ரன்களை கடக்கவில்லை.

dekock

- Advertisement -

அதன் பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 140 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்து இந்த டி20 தொடர் குறித்து பேட்டியளித்த தென்னாபிரிக்க வீரர் பவுமா கூறியதாவது : டி20 போட்டிகளில் நான் முதன்முறையாக தற்போது பங்கேற்கிறேன். நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்கள் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றி இருக்குறேன் என்று நினைக்கிறன். மேலும் என்னுடைய மனநிலை ரன் குவிப்பதில் மட்டுமே இருந்தது.

Bavuma

உண்மையை சொல்லப்போனால் எனக்கு கெயில், தோனி போன்று பெரிய ஷாட்களை அடிக்கும் பவர் இல்லை என்றாலும் ஒன்று இரண்டு ரன்களாக சேர்த்து என்னால் வெற்றி பெற வைக்க முடியும் என்று நினைத்தேன். நான் இந்த போட்டியில் சிக்ஸ் அடித்த போது எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

Bavuma

மேலும் தற்போது தென் ஆப்பிரிக்க அணி இளம் வீரர்களுடன் நன்றாக விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியை வென்று தொடரை சமன் செய்வோம் என்று நினைத்தோம் அதனை செய்து காட்டி உள்ளோம் என்று அவர் கூறினார். ஏற்கனவே இந்த போட்டிக்கு முன்பு இந்திய அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி கிடையாது இந்திய அணியை வீழ்த்தி விடுவோம் என்று அவர் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement