
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 17ஆம் தேதி ஹிமாச்சல பிரதேசம் தரம்சாலா நகரில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. மழையால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து போராடி 245/8 ரன்கள் எடுத்தது.
குறிப்பாக அந்த அணிக்கு விக்ரம்ஜித் சிங் 2, மேக்ஸ் ஓ’தாவுத் 18, ஆகர்மேன் 12, பஸ் டீ லீடி 2, எங்கேல்பேர்ச்ட் 19 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 82/5 என சரிந்த அந்த அணி 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மிடில் ஆர்டரில் கேப்டன் எட்வர்ட்ஸ் அபாரமாக விளையாடி 78* (69) ரன்கள் எடுத்தார்.
சரிதிதிர தோல்வி:
அவருடன் வேன் டெர் மெர்வி 29 (19) ஆர்யன் தத் 23* (9) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்த நிலையில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா, லுங்கி நெகிடி, மார்கோ யான்சென் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 246 ரன்கள் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பவுமா 16, குவிண்டன் டீ காக் 20, டுஷன் 4, ஐடன் மார்க்ரம் 1, ஹென்றிச் க்ளாஸென் 28 என புதிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே குறைந்த ரன்களில் அவுட்டாகி மெகா பின்னடைவை கொடுத்தனர்.
அதனால் 89/5 என சரிந்த அந்த அணிக்கு டேவிட் மில்லர் 43, ஜெரால்ட் கோட்சி 22 ரன்கள், கேசவ் மகாராஜ் 40 ரன்கள் எடுத்து போராடியும் 42.5 ஓவரிலேயே ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் பீக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நெதர்லாந்து உலக கோப்பையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது.
இந்நிலையில் கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை அசால்டாக தோற்கடித்த தாங்கள் இப்போட்டியில் பந்து வீச்சில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது மனதை உடைக்கும் தோல்வியை கொடுத்ததாக தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்களை 112/6 என்று ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்திய நாங்கள் 200 ரன்கள் தாண்ட விட்டிருக்கக் கூடாது. அங்கே நாங்கள் பந்தை தவற விட்டோம்”
இதையும் படிங்க: இதைத்தான் எதிர்பார்த்தோம். தெ.ஆ அணியை வீழ்த்திய பின்னர் நெதர்லாந்து அணியின் கேப்டன் – அளித்த பேட்டி இதோ
“ஆனால் அதை சேசிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களிடமிருந்தது. இருப்பினும் அவர்கள் எங்களுடைய பேட்டிங்கில் இருந்த குறைகளை வெற்றிகரமாக பயன்படுத்தினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசத்திய நாங்கள் இப்போட்டியில் எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்திருக்க கூடாது. அதே போல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெளிப்படுத்திய ஃபீல்டிங் இப்போட்டியில் வெளிப்படுத்தவில்லை. அதனால் கிடைத்த இந்த தோல்வி வலியால் நாங்கள் உடைந்துள்ளோம். தற்போதைக்கு உணர்ச்சிகள் அடங்கிய பின் எங்கள் வீரர்களிடம் பேச வேண்டும். ஆனாலும் எங்களுடைய பயணம் முடிந்துவிடவில்லை. எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி வெற்றி கண்ட நெதர்லாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்” என்று கூறினார்.