அடுத்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியே தீருவோம் – தெ.ஆ வீரர் சவால்

Bavuma-1

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தானது அதன்பிறகு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Kohli 1

இந்நிலையில் நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்து தென்னாபிரிக்க அணியின் வீரரான பவுமா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது :

இந்திய அணி வலுவான அணிதான் மேலும் தொடர்ச்சியான வெற்றிகளால் இந்திய அணி தற்போது சிறப்பான நிலையில் உள்ளது. எங்கள் அணி சற்று மனரீதியாக வலுவிழந்து இருந்தாலும் வலுவான இந்திய அணியை எதிர்க்கும் அனைத்து தகுதிகளும் எங்களிடம் உள்ளது.மேலும் இந்திய அணி வெற்றி பெற முடியாத அணி கிடையாது.

Bavuma

வலுவான இந்திய அணியை வீழ்த்த எங்களால் முடியும். அதற்கு ஏற்றாற்போல் எங்களது வியூகங்களை நாங்கள் வகுக்க உள்ளோம். நாளைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நாங்கள் எங்கள் திறமையை நிரூபிப்போம் பவுமா என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -