இந்திய அணிக்கு எதிராக சதங்களை அடித்து குவிப்பேன் – தெ.ஆ வீரர் சவால்

Bavuma-1
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

IND-vs-SA

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் வீரரான பவுமா இணையதள நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : இந்திய மண்ணில் டி20 தொடரில் நான் அறிமுகமானது எனக்கு சிறப்பான அனுபவத்தை தந்தது.

மேலும் உலகத்தரம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக நாங்கள் தொடரை சமன் செய்தது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தந்தது. மேலும் டி20 தொடரில் நான் செயல்பட்ட விதம் நன்றாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடரை நாங்கள் சிறப்பாக செயல்பட எதிர்நோக்கி உள்ளோம் .மேலும் அதற்கான பயிற்சிகளையும் தற்போது எடுத்து வருகிறோம் எங்களால் சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்கு எதிராக தர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

bavuma

மேலும் நான் 4 வருடங்களுக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனேன். அப்போது அடித்த சதத்தை தவிர நான் அணியில் ஆடும் வாய்ப்பை பெறவில்லை தற்போது மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ளேன் எனவே இந்த தொடரில் நான் சதங்களை விளாச உள்ளேன் என்று பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement